மொழி – அறிவியல் பார்வை

1. உலகம்

நீர் பரப்பு. நீர்ப்பரப்பால் ஆனது.
இந்த நீர் மற்றும் நிலப்பரப்பும் பொருட்களால் நிரம்பி இருக்கின்றன.

2. பொருட்கள்

எவை எல்லாம் இடத்தை நிரப்பும் தன்மையையும் பழுவும் பெற்றிருக்கிறதோ, அவை அனைத்துமே பொருட்கள் எனப்படும்.
இந்தப் பொருட்கள் அனைத்துமே
திண்மம்,
நீர்மம்,
வளிமம்
என்ற மூன்று நிலைகளைப் பெற்றிருக்கின்றன.

3. இந்தப் பொருட்களை அறிவியலார்,

வாழ்வன, வாழாதன – என இரு பெரும் கூறுகள் அடிப்படையில் பிரித்துப் பார்க்கின்றனர்.

வாழ்வனவற்றிடம் உயிர் இருக்கும். அத்துடன் திண்மம், நீர்மம், வளிமம் ஆகிய மூன்றும் இவற்றிடம் இணைந்திருக்கும். இவற்றிற்கு அப்பாற்பட்டு ஒன்று தொடங்கி ஆறு அறிவு அவற்றிற்கு ஏற்ப இணைந்திருக்கும் என்று தொல்காப்பியம் – சூத்திரம் 1526-1532 ஆகிய ஏழு சூத்திரங்களில் அவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறது. அய்ம்புலன்கள் இதில் புலன் என்றால் அறிவு 5 அறிவுடையன சூத்திரம் 1531 இதனைத் தெளிவாக்கும்.

4. உற்றறிவு

சூத்திரம் 1526 சுட்டும் அறிவுகளில் முதல் அறிவான உற்றறிவு, இதுவே புதுமைகள் அனைத்திற்கும் ஆக்கம் தந்து நிற்பது.

இந்த உற்றறிவின் ஆற்றலால் வாழ்வன வாழாதன இரண்டையும் தன்னுடைய ஆளுமையின் கீழ் கட்டுப்படுத்தியுள்ளது மானுடம். இதனால் வாழ்வன வாழாதன என்ற இருபகுதிகளுக்குள்ளும் அடங்கியுள்ள பொருட்களையும் தன் உற்றறிவால் தேவைக்கேற்ப தேவையானவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைத்து புதிய பொருட்களை உருவாக்குகிறான். இப்படி இவனால் உருவாக்கப்படுபவை செயற்கை என்ற பெயரையும், இவனால் உருவாக்க இயலாதவை இயற்கை என்ற பெயரையும் பெறுகின்றன.

5. மொழிக்கு வரையறை.

இந்த இயற்கையில் இறைந்து கிடப்பனவற்றில் அடங்கிய ஒன்று ஒலி. இந்த ஒலிகளில் எந்த ஒலிகளை எல்லாம் எப்படி தேர்வு செய்தானோ, எப்படி இதனை உருமாற்ற¤னானோ என்று அவனே அறியா நிலையில் ஆக்கம் தந்து, அயலவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில், இவன் வாழும் மண், தழுவி நிற¢¢கும் மரபு, செயல், வழக்காறு, உள்ளுறை நீதி, ஆகிய நெறிகளுக்குட்பட்டு வாயின் உள் பகுதியில் அமைந்திருக்கும் பதினாறு பேச்சு உறுப்புகளின் உதவியுடன் முறைப்படுத்தி பொருள்பட ஒரு மொழிசார் ஒலியாக வாய்வளி வெளிப்படுத்தப்படும் ஒலியே மொழி.

தமிழ் மொழியின் சிறப்பு.
புத்தம் புதிய பார்வை

1. மேலோட்டமாக

இயற்கை அறிவியலார் வாழ்வன, வாழாதன என்ற இரு பெரும் கூறாக கூறிட்டு ஆய்கின்றார்கள்.
இதில் வாழ்வன பகுதியில் சார்ந்தவை இயல்பாகவும், இயற்கையாகவும் எப்படி வாழ்கின்றனவோ, அப்படியே தமிழ் மொழியும் வாழ்கிறது.

2. அறிவுபூர்வமாக ‘

அறிவிற்கு ஆட்படுவோம்.
தலைவன்
தலைவி
மக்கள் செல்வங்கள் – இவர்கள் நல்வாழ்விற்கு சட்ட திட்டங்கள் என பல.
வாழ்வியல் வழிகாட்டிகள் எனவும் பல.

3. முன்னேறுவோம் :

இவற்றை மனதில் தாங்கி முன்நோக்கிப் பார்ப்போம்.

1. தலைவன் – 12 உயிர் எழுத்துக்களும்
2. தலைவி – 18 மெய் எழுத்துக்களும்
3. மக்கள் செல்வங்கள் – 216 உயிர்மெய் எழுத்துக்களும்
(பிறப்பு எழுத்துக்கள்)
4. இவர்கள் அனைவருக்குமான வரையறை – எழுத்திலக்கணம்.
5. இவர்களுக்கான செயல் வரையறை – சொல் இலக்கணம்
6. இவற்றின் பயன்பாட்டு நிலை – இல்லறம் – பொருளிலக்கணம்

தமிழ் மொழி எப்படி இயற்கையோடு வாழ்வனவற்றோடு இணைந்து வாழ்வியல் தத்துவத்துக்குள் அடங்கி இருக்கும் கட்டுக்கோப்பான நிலை எண்ணி மகிழத்தக்கதன்றோ.

உயிர் எழுத்து – எப்படி இது உயிர் எழுத்து?

1. முன்னோட்டம் :

தொல்லாசான் என்றழைக்கப்படும் சான்றோர் பெருமகனார் தமது தொல்காப்பிய நூலில் திழ் எழுத்துக்களை :

1. உயிர் எழுத்து
2. மெய் எழுத்து
3. உயிர் மெய் எழுத்து
என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கிறார். இதில் முதலில் உயிர் எழுத்தைப் பார்ப்போம்.

2. சூத்திரம்- 8

ஔ கார இறுவாய்ப்
பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப

3. முதல் வினா?

உற்றறிவில் உதித்த கேள்விகள் :
1. இந்த பன்னிரண்டு எழுத்துக்களிலும் உயிர் இருக்கிறதா?
2. உயிர் இல்லை என்றால் உயிருக்கான குணங்கள் இருக்கிறதா?

‘வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி’
– என்ற வள்ளலார் கூற்றுப்படி என்னை நான் வருத்திட.

4. ஆற்றல்

உயிர்- ஒருவித ஆற்றல் – இது பொருட்களில் வாழ்வன (Living) பகுதிக்குட்பட்டவற்றிற்கு மட்டுமே உரியது என்றும் உணர்ந்தேன். அத்துடன் மொழி மனிதனால் ஆக்கப்பட்டது. செயற்கைப் பொருட்கள் பகுதிக்குட்பட்டது என்பதினால் முதலில் ஆற்றல் பற்றி அறிவோம் என்ற முயற்சியில் இறங்கினேன். இதற்காக இயற்பியல் நூல்களைப் புரட்டினேன்.

இயற்பியல் நூலில் எட்டுவிதமான ஆற்றல்களைப் பட்டியல் போட்டிருந்தார்கள். அவை

1. அடங்காற்றல் –  (Potential Energy)
2. இயங்காற்றல் – (KineticEnergy)
3. செயலாற்றல் – (Mechanical Energy)
4. வெப்பாற்றல் – (Thermal Energy)
5. வேதியலாற்றல் – (Chemical Energy)
6. மின்னாற்றல் – (Electrical Energy)
7. அணுவாற்றல் – (Automic Energy)
8. சூரிய ஆற்றல் – (Solar Energy)

5. பொது குணங்கள்:

இப்போது இவை அனைத்திற்குள்ளும் அடங்கியிருக்கும் ஆற்றலின் பொதுவான குணங்களை ஆராய்ந்தேன். அவை:
1. பார்க்க முடியாது
2. உணர முடியும். (உபகரணங்கள் உதவியால்)
3. இயக்கம் இருக்கும்.
4. அவற்றிற்கான அமைவுகளை இயக்கும்.
5. ஏற்ற இறக்கம் உண்டு.
6. ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக அமையாது.
7. தேக்கி வைக்க முடியாது.
8. பருமனளவு உண்டு
9. வேகம் உண்டு
10. துண்டிக்கவும் இணைக்கவும் முடியும்
11. தரக்கோட்பாட்டிற்கு அடங்கும்
12. மனித ஆற்றலுக்கு கட்டுப்பட்டது.

இப்படி பன்னிரண்டு விதமான குணங்களை பொதுவான குணங்களாகப் பட்டியலிட முடிந்தது.

இப்போது உயிரைப் பற்றி சிந்தித்தேன்.

6. உயிர்

உடனே என் உற்றறிவு, பகுத்தறிவு பகலவனே உயிர் உன் உடம்பில் இருந்து உன்னை இயக்கவில்லையா? எங்கே தேடுகிறாய்? உன்னை முதலில் உற்றுப்பார் என்று இடித்துரைக்க ஓர் கண்ணாடி முன் நின்று உற்றுப்பார்த்தேன்.

பலன் :
1. உயிருக்கான அமைவு உடல்(மெய்)
2. உயிர் தங்க உடல் இயக்கம் பெறும்.
3. உயிர்தங்கி இருக்கும் உடல் வாழும்
4. உடல், உடலின் உறுப்புகள் அவையவங்கள் அனைத்தும் தனித்தனியே வளரும்
5. வளர்ச்சி குறிப்பிட்டகாலம் வரை தொடர்ந்து இருக்கும்.
6. உடலையும் உயிரையும் பிரிக்க முடியும்.
7. பிரிந்த உயிரைப் பிடிக்க முடியாது.
8. இந்த உயிர் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.
9. உயிர் தானாகவும் விலகும்.
10. இனம் பெருக்கத்திற்கு இடம் உண்டு.
11. உயிர் பிரிந்த உடலைப் பேண முடியாது.

இப்படி ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பதினொரு குணங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. இவற்றிற்கு அப்பாற்பட்ட குணங்கள் இருப்பதற்கான இடமும் உண்டு. அப்படி இருப்பின் அவற்றை இத்துடன் இணைக்க அறிஞர்கள் முன்வந்தால் ஆய்வு இன்னும் சிறப்புறும்).

7. ஆற்றலும் உயிரும்

ஆற்றலுக்கான குணங்களை, உயிருக்கான குணங்களுடன் இணைக்க மொத்தம் 23 குணங்கள் உயிருக்கு, இருப்பதை அறிய முடிந்தது.

இப்படி முந்தைய 12 உடன் இந்த பதினொரு குணங்களையும் சேர்த்தால் மொத்தம் 23 குணங்கள். உயிருக்கான இந்த குணங்கள் பண்ணரண்டு உயிர் எழுத்துக்களிலும் காணப்பட்டால் மட்டுமே நம்மால் உயிர் எழுத்துக்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும். எனவே, 23 குணங்களையும் உயிர் எழுத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1. உயிர் எழுத்து மெய் எழுத்தில் மறைந்து நிற்கும்.
2. அ, ஆ… இப்படி ஒலிக்க முடிவதால், சுய ஆற்றல் இருக்கிறது.
3. ஒரு மாத்திரை இரண்டு மாத்திரை ஒலி அளவிற்குட்பட்ட ஒலி உண்டு.
4. மெய் எழுத்தை இயக்கும் திறன் உயிர் எழுத்துக்கு உண்டு.
5. ஒலியில் ஏற்ற இறக்க நிலைகள் உண்டு.
6. மாற்று நிலை கிடையாது.
7. உயிர் எழுத்து மெய் எழுத்தில் தங்கும்
8. பருமனளவு உண்டு.
9. வேகம் உண்டு
10. உயிர் மெய் இரண்டையும் இணைக்க முடியும்.
11. இணைத்ததுபோல் பிரிக்கவும் முடியும்
12. மனித ஆற்றலுக்கு கட்டுப்படும்.
13. மெய் எழுத்தே உயிராற்றலுக்கான அமைவு
14. மெய் எழுத்து உயிரெழுத்தால் மட்டுமே இயங்கும்
15. பேணலைப் பொறுத்து வளரும்
16. வளர்ச்சிக்கு வரம்பு நிர்ணயம் செய்ய முடியாது.
17, பிறப்பெழுத்துக்கள் உண்டு.
18. வாழும் நிலையும் உண்டு
19. உயிர் ஒலி பின் தங்கும்
20. பேணப்பேண பொலிவு பெறும்
21. உற்றறிவால் நாளும் வளரும்
22. தரக்கட்டுப்பாட்டு நெறிக்குள் அடங்கும்
23. உயிர் எழுத்து தானாக மெய்யில் தங்கவோ, பிரியவோ செய்யாது.

8. நிரூபணம் :

நூற்றுக்கு நூறு விழுக்காடு அளவிற்கு நிறைவு செய்திருப்பதால் ஐயன் தொல்லாசான் அகார முதல் ஔகார இறுவாய் பன் ஈர் எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் தான்.

 

மெய் எழுத்து – என்ன காரணத்தால் மெய் எழுத்து?

1. நுளையும் முன்:

மெய் இதன் பொருள்: 1. உண்மை, 2. உடல், 3 ஒற்றெழுத்து, நமது ஆய்விற்கு உடல் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. எனவே, உடல் அடிப்படையில் ஆய்வை மெய் எழுத்திற்கான தொல்காப்பிய சூத்திர எண் 9இல் இருந்து தொடங்குவோம்.

ன கார இறுவாய்ப்
பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ற் ன்
ஆகிய இவையே பதினெட்டு மெய் எழுத்துக்கள்.

மெய் – தனிச்சொல்
எழுத்துகள் – தனிச்சொல்

இந்த இரண்டு சொற்களையும் ஐயன் இணைத்ததின் காரணம் மெய், இதன் குணங்கள் இந்த எழுத்துக்களில் இணைந்தே இருக்கும் என்பதால்தான். இது உண்மைதான் என்பதை அறிந்து உலகோர்க்கு எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமை. ஆகவே, மெய் எழுத்துக்குள் புகும் முன்பு மெய் எனப்படும் நம்முடைய இந்த உடம்பின் குணங்களை அறிவோம்.

2. உடம்பிற்கான இரண்டு நிலைகள்

1. இந்த உடம்பிற்கு உயிருடனான நிலை ஒன்றும்
2 உயிர் இல்லா நிலை என்று ஒன்றுமாக இரு நிலைகள் இருப்பதை நாம் அறிவோம். இதில் முதலில் உயிர் இல்லா நிலையில் இந்த உடலைப் பார்ப்போம்.

3. முதலில் உயிரில்லா உடலின் குணங்கள்:

1. வைத்த இடத்தில் வைத்தபடி இருக்கும்.
2. கண்ணிற்கு புலப்படும்
3. தொட்டுணர முடியும்
4. நாம் செய்வதொன்றையும் உடல் அறியாது.
5 பேண முடியாது.

4. இரண்டாவது உயிர் இருக்கும் உடலின் குணங்கள்

1. உடல் இயங்கும்
2. செய்வதனைத்தையும் உடல் அறியும்
3. செயல்- எதிர் செயல் என்ற இரண்டு ஆற்றலும் இருக்கும்
4. காலத்தோடு இணைந்த வளர்ச்சி இருக்கும்.
5. உறுப்புகள், அவையவயங்கள் தனித்தனியே வளரும்.
6. மானுடருக்கு மட்டும் அறிவு தனியாக வளரும்.
7. அனைத்தும் அது அதற்கான பணியைச் செய்து கொண்டே இருக்கும்
8. மானுடரின் அறிவு உறுப்புகள் தகவல் பரிமாற்றம் செய்யும்.
9. தகவல்களின் அடிப்படையில் அவையவங்கள் பணிகளில் ஈடுபடும்.
10. அறிவுத் திறனுக்கேற்ற பயன் நிலைகள் உண்டு
11. மொழி அறிவு மானுடத்திற்கு உண்டு
12. பாலின பிரிவு உண்டு.
13. பருவகாலத் தோற்றப் பொலிவுகள் உண்டு
14. தாம்பத்தியம் உண்டு
15. இனப்பெருக்கம் உண்டு
16. உடல் பழுது படும்
17. பழுது நீக்கவும் நீங்காதிருக்கவும் இடம் உண்டு
18. உயிரையும் உடலையும் பிரிக்க முடியும்
19. பிரிந்த உயிரையும் உடலையும் சேர்க்க முடியாது
20. உடலை விட்டு உயிர் தானாக விலகும்நிலையும் உண்டு.
21. உயிர் பிரிய பிணம் என்ற பெயரைப் பெறும்
22. உயிரில் மெய் தங்காது.
23. உயிரற்ற உடலைப் பேண முடியாது.

இப்படி உடலுக்கு இருபத்தி ஆறு குணங்களை என்னால் அடையாளம் காண முடிந்தது. இந்த இருபத்தியாறு குணங்களில் எவ்வளவு அதிகமான குணங்கள் இந்த மெய் எழுத்தில் இருக்கிறதோ, அவ்வளவுக்கு இந்த மெய் எழுத்துக்களை மெய்யெழுத்துக்கள்தான் என்று நிரூபிக்க முடியும்.

5. ஒப்பீடு.

இப்போது இந்த உடலுக்கான பண்புகள் மெய் எழுத்தில் இருக்கிறதா என்பதை அதே வரிசைப்படி பார்ப்போம்.

6. உயிரின்றி

முதலில் உயிர் எழுத்து மெய் எழுத்தில் இணையாத நிலையில்,
1. மெய் எழுத்துக்கள் புள்ளி தாங்கி நின்று உச்சரிக்க முடியா நிலையை உணர்த்த நிற்கும்
2. மொழி சார்புடையது என்பதால் வரிவடிவம் உண்டு. இதனால் கண்ணால் பார்க்க முடியும்.
3. அரை மாத்திரை ஒலி இருந்தும் உயிர் எழுத்து இடம் பெறாததால் ஒலிக்க முடியாது
4. பேண முடியும். மொழியின் உடல் என்பதால்,
7. ஒலிநிலை

உயிர் எழுத்து மெய் எழுத்துடன் இணைந்த நிலையில்

1. செயலாற்றலை மெய் எழுத்துக்கள் பெறும்
2. நாவாற்றலுக்கு உட்படும்
3. பேணல் அடிப்படையில் வளர்ச்சி பெறும்
4. துறைகள் சார்ந்த வளர்ச்சியும் உண்டு.
5. மொழி வளர்ச்சியும் உண்டு.
6. ஒவ்வோர் எழுத்துக்கும் அது அதற்கான செயல் நிலைகள் உண்டு
7. உயிர் எழுத்து இடம் பெற மெய் புள்ளிகளை இழக்கும்
8. பயன்படுத்த, பயன்படுத்த, பயனளிக்கும் இயல்பு உண்டு
9. மானுடரின் அறிவுறுப்புகளின் ஆற்றலுக்கு அடங்கும்
10. தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும்
11. உற்றறிவிற்கு ஏற்ற அளவில் பயனளிக்கும்
12. பலினத்திற்கு ஒத்த செயல் உண்டு
13. பேணப் பேண மெருகுறும்
14. பிறப்பெழுத்துக்கள் உண்டு.
15. பருமனளவு உண்டு.
16. வேகம் உண்டு
17. உயிர் மெய்யை, உயிர் – மெய் என்று பிரிக்க முடியும்
18. பிரித்தது போல் உயிரையும் மெய்யையும் இணைக்க முடியும்
19. மானுட ஆற்றலுக்குள் அடங்கும்
20. தரக்கட்டுப்பாட்டிற்குள் அடங்கும்
21. அது அதற்கான குறிகள், அவற்றுடன் இணைந்திருக்கும் உயிர் எழுத்தைச் சுட்டி நிற்கும்
22. இலக்கண வரம்பு உண்டு

இங்கும் மெய் எழுத்துக்கும் மொத்தம் இருபத்தி ஆறு குணங்கள்.

8. உறுதி

இருபத்தி ஆறுக்கு இருபத்தி ஆறு என்பதால் நூற்றிற்கு நூறு தொல்லாசான் சுட்டும் மெய் எழுத்துக்களும் குணங்களால் மெய் எழுத்துக்கள்தான் என்று உறுதி செய்கிறேன். அத்துடன் புள்ளியியல் தரக்கோட்பாட்டு முறைகளைப் பயன் கொள்வோமேயானால் இதில் எழும் எல்லா சந்தேகங்களுக்கும் துல்லியமான தீர்வும் பெற முடியும்.

9. சிறப்பு

இவற்றிற்கு அப்பாற்பட்ட மெய் எழுத்துக்களின் சிறப்புகள்.

1. க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறும் வல் எழுத்துக்கள் என்றும்
2. ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய ஆறும் மெல் எழுத்துக்கள் என்றும்
3. ய, ர, ல, வ, ழ, ள ஆகிய ஆறும் இடை எழுத்துக்கள் என்றும்,

ஆறு ஆறு எழுத்துக்களாக மூன்று கூறாக்கி அவற்றை வல்லினம், மெல்லினம், இடையினம் சுட்டுகிறார். இதன் உள்பொருள் இதுநாள் வரையிலும் அறியப்பட்டதாகவும், அறிய முற்பட்டதாகவும் தகவல் இல்லை.
ஆக்க நிலையில் ஒரு மெய்யுடன் மற்றொன்று இணைந்து நிற்கும் என்றும் தெளிவுபடுத்துகிறார்.
இதனை சூத்திரங்கள் 19, 20, 21, 22 ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதற்கு அப்பாற்பட்ட விளக்கங்களும் சூத்திரங்கள் 23 முதல் 30 வரை ஆழ்ந்து படிக்கும் போது தெரிய வரும்.

புள்ளியல் தரக்கோட்பாட்டினடிப்படையில் ஆழ்ந்து ஆய்வோமேயானால் நல்ல பலன்களையும் நுட்பங்களையும் நம்மால் நிச்சயமாகப் பெற முடியும்.
கவனத்தில் கொள்ளப்பட்ட சூத்திரங்கள் 1, 9, 10, 11,13, 15 மட்டும்.

உயிர் மெய் எழுத்து – எக்காரணத்தால் உயிர்மெய்?

1. கண்ணோட்டம்

இது தமிழ் எழுத்துக்களின் மூன்றாம் நிலை. இப்பகுதியில் உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களுடன் இணையும் போது பிறப்பெழுத்துக்களின் பிறக்கின்றன. இந்த எழுத்துக்களின் சீர் நிலைகளை பொது நெறி அடிப்படையில் பார்ப்போம்.

2. உயிர் எழுத்துக்கள்

ஔ கார இறுவாய் பன்னிரண்டு எழுத்துக்கள்

3. மெய் எழுத்துக்கள்

ன கார இறுவாய் பதினெட்டு எழுத்துக்கள்

4. தெளிதல்

மேலே பார்த்த பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பின்னர் பார்த்த பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் இணையும்போது 12 x 18=216 (இறுநூற்றுப் பதினாறு) உயிர் மெய் பிறப்பெழுத்துக்கள் கிடைக்கும். இவை அனைத்தும் அது அதற்கான மெய் எழுத்துக்கள் சாயலை பெற்றே நிற்கும். முதல் உயிரெழுத்தான அ உடன் இணையும் பதினெட்டு மெய் எழுத்தும் அதனதன் புள்ளிகளை மட்டும் இழக்கும். மீந்த பதினொரு உயிருடன் இணையும் பதினெட்டு மெய் எழுத்துக்களும் புள்ளிகளை இழப்பதுடன், அது அதற்கான குறிகளை அணியாகப் பெற்று நிற்கும். அத்துடன் தாய் எழுத்தான மெய் எழுத்துக்களின் அதற்கே உரிய வரிவடிவத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

5. சோதனை

இப்போது உயிர் தங்கி இருக்கும் உடம்பைப் பெற்றிருக்கும் நாம் நம்மை நாமே அடிப்படையாகக் கொண்டு உயிர் மெய் எழுத்துக்களின் குணங்களைப் பார்ப்போம்.

6. புறநிலையில்

1. உயிர் எழுத்து மெய் எழுத்தில் மறைந்தே இருக்கும். அதாவது உயிர் எழுத்தின் வடிவம் வெளிப்படாது. தெளிவாகச் சொன்னால் கண்ணால் பார்க்க முடியாது.
2. முதல் உயிர் எழுத்து, பதினெட்டு மெய் எழுத்துக்களில் தங்கிய உடன் மெய் எழுத்துக்கள் அவற்றின் புள்ளியை இழந்து விடும்.
3. மீதி உள்ள பதினொரு உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களுடன் இணைந்திட அவை அனைத்தும் புள்ளியை இழப்பதுடன் அந்தந்த உயிர் எழுத்திற்கே உரிய தனித்தனியே குறிகளை நெருங்கி நிற்கும்.
4. இந்த குறிகள் மூலம் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களில் எந்தெந்த உயிர் எழுத்து மெய்யெழுத்தில் இணைந்துள்ளது என்பதை அறிய முடியும்.

7. ஒலி வடிவ நிலையில்

1. மெய் எழுத்தின் ஒலி முந்தியும், உயிர் எழுத்தின் ஒலி அதனைத் தொடர்ந்தும் ஒலிக்கும்.
2. இணைவது குற்று உயிராயின், குற்றுயிர் ஓசையையே அதற்கான உயிர் மெய் எழுத்துக்கள் பெறும்
3. இணைவது நெட்டுயிராயின் நெட்டுயிரின் நெட்டோசையையே அதற்கான உயிர் மெய் பெறும்.
4. இரண்டு மாத்திரைக்கு மேல் உயிர் மெய் எழுத்துக்களும் ஒலிக்காது.
5. உயிர் ஒலி தேவைப்படுமாயின் வரிவடிவத்திற்கு எந்த மாற்றமும் தராமல் தேவைக்கேற்ப ஒலித்து கொள்ளலாம் என்ற விதிவிலக்கும் தொல்லாசானால் தரப்பட்டுள்ளது.
6. உயிர் ஒலிக்கு வரம்பு, பயன்பாட்டு நிலையே.

8. வரிவடிவ நிலையில்

1. மெய்யெழுத்து அதன் வரிவடிவ நிலையை இழக்காது.
2. உயிர் மெய்யில் – உயிர் தன் வரி வடிவத்தை இழக்கும்.

3. உயிர்மெய் எழுத்தின் வரிவடிவத்தில் உயிர் எழுத்திற்கான குறி (அணி) மெய் எழுத்தினை நெருங்கிய நிலையில் நிற்கும்.
4. ஒட்டுமொத்த நிலையில் : தரக்கட்டுப்பாட்டிற்கு அடங்கும்.
5. அடிப்படை.

9. தொல்காப்பியம் சூத்திரங்கள் 17 முதல் 30 வரை

உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர்மெய் எழுத்து என்றுயிர்த்து நிற்கும் மூன்றையும் தொகுத்துப் பார்த்தால்,
தலைவன்
தலைவி
பிள்ளைகள்

என்கின்ற இயற்கை தத்துவ நெறி ஒரு மொழியில் எப்படி பிணைந்து நிற்கிறது என்பது புலப்படும். இதனைத் தொடர்ந்து 1610 சூத்திரங்கள் வாயிலாய் இந்த மொழிக் குடும்பத்தின் ஆக்கங்களை படிப்படியாக குடும்பம் என்ஹ நிலையில் தொடங்கி உறவு அயலகத்தார். அப்பக்கம் அந்தப் பகுதி, அவ்வூர், நாடு எனப் படர்ந்து திருக்குறள் மூலம் உலகமே உய்வதற்கு வழிகள் ஆயிரம் வகுத்து நிற்கும் பெருமை. இமாலயப் பெருமை. ஏன் இந்தப் பெருமை உலகைச் சென்றடையவில்லை? இந்தக் கேள்வியை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் பயில வந்திருந்த வெளிநாட்டு மாணவி, அவர்களைப் பேட்டி காண வந்த ஊடகத்தாரிடம் வினவியதும் என்னுள்ளத்தில் வெளிப்பட்டது. என் செய்வேன் என்று ஏங்கினேன்.

நான் உணர்ந்தது :
நான் உணர்ந்து பயனில்லை என்பதை நானறிவேன்.
உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்
உணர்வார்களா? அவர்கள் ஒன்று சேர்வார்களா?

 

உயிர் மெய்
VS
VOWEL CONSONANT

(இமயமலை அளவிலான பெருந்தவறு)

1. தமிழ் எழுத்துக்களை

அ கரம் முதல் ன கரம் இறுவாய் முப்பது என்றும்
அகரமோடு உயிர்த்தலும் ஏனை உயிரோடு
உருவு திரிந்து உயிர்த்தலும்… உண்டு என்று சூத்திரங்கள் 1 மற்றும் 17 வாயிலாய் தெளிவுபடுத்துகிறார். சான்றோர் பெருமகனான தொல்லாசான்.

2. தெளிவாகச் சொல்வதானால்,

1. உயிர் எழுத்து
2. மெய் எழுத்து
3. உயிர்மெய் எழுத்து என்று மூன்று குழுக்களாகப் பிரித்துப் பார்க்கிறார்.

இதில் முதல் இரண்டிற்கும், தனித்துவம் உண்டு. மூன்றாவது குழுவான உயிர் மெய் உயிர் எழுத்தையும், மெய் எழுத்தையும் சார்ந்ததே.

இந்த மூன்றைப் பற்றியும் இது நாள் வரையிலும் யார் உள்ளத்திலும் தோன்றாத புதிய பார்வையிலான விளக்கத்தில் பார்த்துள்ளேன். அத்துடன் அதனை எவ்வளவு எளிய முறையில் மிகவும் சுருக்கமாக சுருங்கி பார்த்துள்ளேன். தரப்பார்வையையும் சற்று தள்ளியே வைத்துள்ளேன்.

3. பிரச்சினை:

இப்போது நான் உங்கள் முன் வைக்கும் பிரச்சினை முதல் இரண்டிலும் அடங்கும். உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் ஆங்கில சொற்களான வவ்வல் கான்சொனன்ட் ஆகியவற்றிற்கு இணை என்று பாடம் நடத்துவதும் வாய்ப்பு கிடைக்கும். இடங்களில் இப்படி விளக்கிக் கூறுவதும்தான்.

அப்படி இணையான சொற்களாய் இருக்குமானால் இந்த நான்கு சொற்களுக்குள்ளும் ஏதாவது ஒரு தொடர்போ அல்லது ஒற்றுமைக்கோ ஏதாவது ஒருவிதத்திலாவது கடுகத்தனை அளவிலான இடம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லா நிலையில் நிகர் என்பது அறிவுடைய செயல் இல்லை. இது தமிழ் அன்னையின் கழுத்தில் சொருகி இருக்கும் முள்களில் மோசமான முள் என்பது என்னுடைய முடிவு.

4. விவாதம்

மேலும் சொல்வதானால் இப்படி கூறுபவர்களிடம் இந்த நான்கு சொற்களைப் பற்றியும் எந்தத் தெளிவும் இல்லை என்பது பரிதாப நிலை தெளிவற்ற நிலையில் வருங்காலத் தலைமுறையினரைத் தவறுதலாய் வழி நடத்தவும் செய்கின்றனர்.

5. வேதனை

இப்பகுதியில் வேதனையின் உச்ச கட்டம் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலத் தமிழ் அகராதி 2010 பக்கங்கள் 1184 இல் வவ்வல் 225 இல் கான்சொனன்ட் ஆகிய இரு ஆங்கிலச் சொற்களுக்கும்
உயிர் ஒலி, உயிர் எழுத்து என்றும்
மெய் ஒலி, மெய் எழுத்து என்றும்தான்
பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
எத்தனை பெரிய இமாலயத் தவறு.

இழிவு உலகப்புகழ் பெற்றுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் அல்லவா.
இப்போது நான் சொல்வதும் நேர்மையுள்ளவர்கள் மத்தியிலன்றி வேறு யாரிடம் எடுபடப்போகிறது? சீத்தலை சாத்தனார் போல் நாந்தான் என் தலையில் குத்திக்கொள்ள வேண்டும். இல்லை உடம்பைக் கீறி வேதனையைத் தணித்துக் கொள்ள வேண்டுமே அல்லாது வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

6. பணி:

எது எப்படி இருப்பினும் நாம் நம் பணியினைத் தொடர்வோம். இதன் முக்கிய பகுதியாக வவ்வல், கான்சொனன்ட் என்ற இரு சொற்களையும் உற்றறிவால் அணுகுவோம்.
இரண்டு சொற்களுமே அப்பழுக்கற்ற ஆங்கிலச் சொற்கள். இரண்டிலுமே ஆங்கில மொழிக்கே உரிய இயல்புகளும், சீரான உச்சரிப்பும் நிறைந்து இருக்கின்றன. அத்துடன் இந்த இரண்டு சொற்களின் நிலைகள் பொருள் என்ன என்பதை அவர்கள் நூல்களில் உரியதும், உயரியதுமான விளக்கங்களுடன் பொருள் பதிவு செய்துள்ளனர்.
நாம்தான் உற்றறிவும், ஏணைய அறிவும் இன்றி வவ்வலுக்கு உயிர் ஒலி, உயிர் எழுத்து என்றும், கான்சொனன்ட் மெய் ஒலி, மெய் எழுத்து என்றும் பரிதாபமாய் பதிவு செய்து வைத்துள்ளோம். அதையே பகுத்தறிவின்றி விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆங்கில நூல்கள் பலவற்றில் கூறி இருப்பதை பின் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

7. உயிர் ஒலி முதலாவதாக :

உயிர் ஒலி என்றும்
மெய் ஒலி என்றும்
ஒலிகள் உண்டுமா?

ஒலிகள் பற்றி விரிவாகப் பார்க்கப்பட்டிருக்கும் இயற்பியல் நூல்களில் எதிலும் உயிர் ஒலி பற்றியோ மெய் ஒலி பற்றியோ எந்தவிதத் தகவலும் இல்லாத போது, சென்னை பல்கலைக்கழகம் உயர்மட்ட ஆணையுரிமை பெற்றுள்ள அமைப்பு, இப்படி திசை திருப்பிய செய்தியை அகராதியிலேயே பதிவு செய்து, எத்தனை கோடி மக்களை தவறுதலாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
தமிழின் உயிர் எழுத்தில் உயிர் இருக்கிறதா?

உயிர் இருப்பவைகளிடமே உயிர் ஒலி இருப்பதாக இயற்பியல் நூல்களும், விலங்கியல் நூல்களும் கூட கூறவில்லையே! ஏனைய நூல்களிலும் கூறப்பட்டிருப்பதாகவும் என் அறிவிற்கு எட்டவில்லை.

8. மெய் ஒலி இன்னும் அழுத்தம்

மெய் என்றால் உடல்
உயிர் இருக்கும் உடலா? உயிரில்லா உடலா என்றால்?
உயிரில்லா உடல்,
உயிரில்லா உடல் என்றால் மானுடத்தின் கொள்கை அடிப்படையில் ‘பிணம்’, ‘மிருகங்கள் வகையில் செத்த’
இந்த நிலையில் பார்த்தால் பிண ஒலி என்றும் செத்த ஓலி என்றுமல்லவா பொருள் படுகிறது?

9. தெளிதல்:

நம் உடலில் இருப்பது போன்ற உயிர் தமிழின் உயிர் எழுத்துக்களிலும் கூட இல்லை.
தமிழின உயிர் எழுத்தில் இருப்பது எல்லாம் நான் ஆய்ந்து அறிந்த உயிரின் இருபத்தி மூன்று குணங்கள் மட்டும்தான்.
இந்த உயிர் எழுத்தில் உள்ள 25 குணங்களில் எத்தனை குணங்கள் இந்த வவ்வல்  a, e, i, o, u என்ற ஐந்து ஆங்கில எழுத்துக்களில் இருக்கிறது?

ஒலி நிலையில் கூட மாத்திரை என்ற அலகு இவற்றிற்கு இல்லையே.

10. உணர வேண்டியது :

நன்றாக நாம் நம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று இல்லை என்பதால் அது இழிந்தது அன்று, அது அது அது அதற்கான சிறப்புகளைப் பெற்றிருக்கும். ஆங்கிலத்தின் சிறப்புகள் ஆங்கிலத்திற்குரியது.

மானுட நிலையில் ஒரு மொழியை மற்றுமோர் மொழியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வது வளர்ச்சிப் பாதையில் மானுடத்தை வழி நடத்தும், அத்துடன் அறிவார்ந்த செயல், நன்மை பல பயக்கும் செயல்.

இல்லாததை பதிவு செய்வது இழிந்த செயல், காரணம் தலைமுறைகளைத் தவறுதலாய் வழிநடத்தும். நமது இன்றைய நிலைக்கு அடிப்படையாகக் காரண்களில் மிக முக்கியமான ஒன்று. இது போன்ற பதிவுகள், கண்டும், காணாதிருப்பதும், உணர்ந்தும் உயிர் பெற்றிருப்பதும் கயமை, வேதனை.

11. அடுத்த நிலையாக

தமிழின் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்களில் இணையும் அப்படி இணைந்தால் மட்டுமே, நம்
உடல் உயிரால் இயக்கம் பெறுவதைப் போல் மெய் எழுத்து இயக்கம் பெறும். சுருங்கச் சொன்னால் ஒலி பெறும்.

இதன் பின்னர் உள்ள நிலையில், உயிர் எழுத்து, மெய் எழுத்தில் இணைந்திட பிறப்பெழுத்துக்களை அவை பிறப்பிக்கும்.
இந்த இயற்கையோடு இணைந்த நிலை இந்த ஆங்கில எழுத்துக்களுக்குக் கிடையாது. எனை ஆங்கில எழுத்துக்களுடன் இணையும் நிலையில் கிடையாது. மேலும் அவர்கள் இணையும் என்று எங்குமே குறிப்பிடவும் இல்லை.
மீண்டும் வலியுறுத்துகிறேன் ஆங்கில மொழியை ஆங்கில மொழியாகவும், தமிழைத் தமிழாகவும் பாருங்கள், பயன்பெறுவோம்.

12. சூத்திரம் 9

இப்போது மெய் எழுத்தையும், கான்சொனன்ட்டையும் பாருங்கள்.

ன கார இறுவாய்ப் பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப.

க் தொடங்கி ன் முடிவிலான பதினெட்டு எழுத்துக்களும் உயிரற்ற மெய் எழுத்துக்கள். உயிர் எழுத்துக்களான அ கார முதல் ஔ கார முடிய பன்னிரண்டு எழுத்துக்களும் இந்த பதினெட்டு மெய் எழுத்துக்களில் இணையும் போது 18 x 12 = 216 இப்படி இருநூற்று பதினாறு பிறப்பு எழுத்துக்கள் கிடைக்கின்றன.

13. ஒப்பீடு

ஆங்கில எழுத்துக்கலான இருபத்தி ஒரு கான்சொனன்ட் எழுத்திற்கும் செயலாற்ற நிலையும், a, e, i, o, u ஆகிய அய்ந்து வவ்வலுடனும் இணைவதற்கான வாய்ப்பும் இல்லவே இல்லை. இது ஆங்கில மொழிக்கு இது ஒரு குறையும் அல்ல என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

14. குடும்பம் – தமிழ்

நம் வீட்டை ஆக்கப்பூர்வமாய் பாருங்கள்.
தலைவன்
தலைவி
தன்னையர் (சகோதர, சகோதரி)
இதேபோல் தமிழைப் பாருங்கள்
உயிர் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
உயிர் மெய் எழுத்துக்கள்

15. இயற்கை நிலை

இயற்கை அடிப்படை விதிமுறை எப்படி பின்னிப் பிணைந்து நிற்கிறது.
இந்த இயற்கை நிலைமையை உள்ளம் கொண்டிருந்தாலே இந்த இமயமலைத் தவற்றைத் தவிர்த்திருக்க முடியுமே.
இனிமேலாவது தலை நிமிர்வோம்.

தவறைத் திருத்துவோம். அப்படித் திருத்துவதும் திருந்துவதும் நம் கடமை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நிற்க இப்போது வவ்வலைப் பற்றி ஆங்கிலேயர் அவர்தம் நூலில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

16. VOWEL :

A. Voiced speech sound characterized by generalized friction of the air passing in continuous stream through the pharynx and opened mouth with relatively no narrowing or other obstruction of the speach organs.
b. A letter as a.e.i,o,u representing such a sound distinguished from consonant.

1. வவ்வலானது. ஓசையின் குணாதிசயங்களை தன்னுள் கொண்ட பேச்சொலியாகும். காற்றானது ஆற்றொழுக்கு நிலையில் கடந்து செல்லும் போது, பொதுவாக உராய்ந்தே செல்லும். இப்படி காற்று அடித் தொண்டை வழியாய் வெளியே வரும்போது, அதனுடன் தொடர்புடைய வாய் குறுகலுக்கு இடமளிக்காத நிலையிலோ அல்லது எனைய பேச்சுறுப்புகளின் தடையாலோ ஏற்படும் ஒலியேயாகும்.

2. மேலும் கான்சொனனன்ட் எழுத்துக்களி¢ ஒலிகளில் இருந்து வேறுபட்டிருப்பதுடன் a, e, i, o, u. என்ற எழுத்துக்களின்  ஒலிகளை முதன்மைப்படுத்தியிருக்கும்.

Vowel : ‘Any speech sound pronounced without stoppage or friction of the breath, letter, standing for such sound as a, e, i, o, u.

நிறுத்தம் இல்லாமல் உச்சரிக்கக்கூடிய எந்த பேச்சு ஒலியாகவும் அல்லது சுவாச மூச்சின் உராய்வொலியாகவும் இருக்கும். இந்த எழுத்துக்களின் ஒலியே வவ்வல்.

இதிலிருந்து தெளிவாகத் தெரிய வருவது வவ்வல், ஒலி தொடர்புடைய ஒரு நிலையை மட்டும் சார்ந்தது. வேறு எதுவும் இல்லை. தமிழ் – உயிர் எழுத்தோ, இயற்கை நெறிபட்டு இருபத்தி இரண்டு குணங்களின் அடிப்படையில் செயல்படக்கூடியது.

அடுத்ததாக:

17. Consonant

இது பற்றி ஆங்கில நூல் சொல்வதைக் கவனிப்போம்.

1. Any speech sound produced by stopping and releasing the air stream (p,t,k,b,d,g) or stopping at one point while it escapes at another (m,n,nl,r) or forcing it through a loosely closed or very narrow passage (f,v,s,zh,shm,z,th) or by a combination of these means (ch.j)
2. Loosely a letter representing such a sound (k,s, etc) or combination of such sounds (x=ks or gz) distinguished from vowel.
3. In lingustics

(a) any phoneme especially one produced an described above that functions;

(b) any sound in any language that does not function as a syllabic and then.”
a sound, letter other than a vowel a agreeing with in accord.

வல்லவனுக்கு தரப்பட்டிருக்கும் விளக்கத்தை ஒத்த விளக்கம்தான் கான்சொனன்டிற்கும் தரப்பட்டுள்ளது. கான்சொனன்டும் ஒலியும் அதன் பல்வேறு மாற்ற நிலைகளும்தானே தவிர, வேறல்ல என்பதனை இதைப் படிக்கிற அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

கான்சொனன்டிற்கான தமிழாக்கம்.

நிலை ஒன்று :

தடை செய்து நிறுத்திவிட்டு பின்னர் விடுவிக்கப்படும் எந்த பேச்சு ஒலியானாலும் அது ஆற்று ஒழுக்குபோல் சொல்லும் காற்று அல்லது ஒரு நிலையில் அக்காற்றினை தடுத்திடும்போது, அதே காற்று மற்றுமோர் வழி வழியாக வெளியேற முற்படும்போது (m, n,nl, r ) அல்லது அந்தக் காற்றினை அழுத்தம் தந்து, தளர்ச்சியாக செறிவின்றி அடைந்தோ, அல்லது மிகவும் குறுகலான வழி வழியாகவோடும். (f, v, s, zh, z, th, h, w. v) அல்லது இவை எல்லாமே ஒருங்கிணைந்து (Ch, j) என்ற ஒலிகளை ஏற்படுத்தும்.

நிலை இரண்டு :

தொய்வாக ஒரு எழுத்து ஒலி பிரதிநிதித்துவம் பெற்றிடும் போதுள்ளது போன்ற ஒலி (k, s. etc.,) அல்லது அவற்றுடன் தொடர்புள்ள ஒலிகளான (x=ks அல்லது gz) வவ்வல் எழுத்துக்களின் ஒலிகளில் நின்று வேறுபடுத்திக் கண்டறியக் கூடியதாக இருக்கும்.

நிலை மூன்று :

மொழி இயலில்

ணீ. மேலே சுட்டிக்காட்டப்பட்ட நெறிகளில் வெளிப்படுத்தப்படும் சிறப்புடைய எந்த ஒலியாக இருந்தாலும் அவை மேலே விவரித்தப்படி செயல்பட வேண்டும்.

தீ. எந்த மொழியின் எந்த ஒலியானாலும் அது மொழி இயலில் உள்ள அசைபோல செயல்படாமல் இருக்க வேண்டும்.
இவற்றிற்கு அடுத்தப்படியாக:
வவ்வலில் அடங்காத ஒரு எழுத்தும் அதன் ஒரு ஒலியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் பொருத்தமாக இருக்க வேண்டும்.

18. முடிவு :

மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடு.
ஒலி-ஒலியின் மாறுபட்ட நிலைகளே தவிர, வேறு எதுவும் கான்சொனன்டிற்கு இல்லை என்று ஆங்கில நூல்கள் கூறும்போது தமிழின் மெய் எழுத்து, மெய்யினநிலை மெய்யின் செயல்பாடு அனைத்தையும் துல்லியமாக அறிந்த அறிஞர் பெருமக்கள், சென்னை பல்கலைக்கழக அறிஞர்கள் கான்சொனன்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் மெய் எழுத்து என்று பதிவு செய்தார்களோ.
மனிதன் தவறுவான்.
திருந்துபவன் மனிதனாவான்.

 

பேடு (உயிர் எழுத்து)

1. ‘அரிது அரிது…கூன் குருடு,

   பேடு நீங்கி பிறத்தல் அரிது’
‘குறை’ இதுவே இதன் எளிய பொருள்.
சில குறைகள் அகற்றப்படக் கூடியவை.
சில நம்மை சிரமத்திற்கு ஆட்படுத்தும்.
எப்படி இருப்பினும் சந்திக்க வேண்டியது நம் தலையாய கடன்.

2. சூத்திரம் – 3

‘….அ, இ, உ, எ, ஓ என்னும் அப்பால் அய்ந்தும்
ஓர் அளவு இசைக்கும் குற்று எழுத்து என்ப..’
அயந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலி அளவில் ஒலிக்கும் குறில் உயிர் எழுத்துக்களாகும்.
பிரச்சனை எதுவும் இன்றி மிக மிகத் துல்லியமாக இருக்கிறது.

3. சூத்திரம் – 4

‘….ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈர் அளவு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.
ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலி அளவில் இரண்டு மடங்காக ஒலிக்கும் நெட்டோசை உடைய எழுத்துக்கள் என்று கூறவும்.

4. பார்த்த மாத்திரத்திலேயே உள்ளத்தில் நெருடல்

1. குற்றோசை உயிர் எழுத்து, அய்ந்து மட்டும் இருக்க, இந்த அய்ந்து எழுத்திற்கு மட்டும் தானே நெட்டோசை வரவேண்டும். எப்படி நெட்டோசை எழுத்துக்களாக ஏழு எழுத்துக்கள் அறிமுகமாகிறது?

2. மிகைப்படியான எழுத்துக்கள் எவை?
ஐ, ஔ – இரண்டும் மிகைப்படியாவனை.
ஒழுக்க நெறியிலிருந்து விலகி இடம் பெற்றுள்ளது.
இடம் பெற்றுள்ள விதம்
ஐ–‘அய்’, ‘அவ்’ – ஔ

அ- என்கிற குற்று உயிரும், ய், வ் என்கின்ற இரண்டு மெய் எழுத்துக்களும் அவற்றின் புள்ளியுடன் சேர்ந்து நிற்கின்ற நிலையிலான ஓசை அமைவு?
எனவே, இந்த அய், அவ் இரண்டிற்கும் இரட்டை ஒலிக்குத்தான் இடமிருக்கிறதே தவிர, இருமடங்கு அதாவது இரண்டு மாத்திரை ஒலிக்கு ஒரு சிறிதும் இடம் இல்லை என்பது கண்கூடு.
மீந்த ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய அயந்திற்கும் இருமடங்கு அதாவது இரண்டு மாத்திரை ஒலி.
எண் நிலையிலும் குளறுபடி
எழுத்து நிலையிலும் குளறுபடி.

3. ஐ இதற்கு ஒரே எழுத்து
ஔ இதற்கு இரண்டு எழுத்து

அத்துடன் இதற்கான உண்மை மற்றும் மரபு படியான ஒலி ஔ அவ் அல்ல. அப்படடியானால் ஒ ள என்பதாகும். ஔவிற்கு – ஒரு குற்றுயிர் எழுத்து, அதன் அருகில் ஒரு உயிர் மெய் எழுத்து.
ஓ+ள்+அ
ஒரு உயிர் எழுத்தில் இரண்டு உயிர், ஒரு மெய் எவ்வளவு பரிதாபமான நிலை.
ஒரு உடம்பில் இரண்டு குற்றுயிரா?

4. அடுத்ததாக நெட்டுயிர் வரிசையில் இரண்டாவது எழுத்தான ஈ-யை பாருங்கள்.
1. தாய் எழுத்தான இ-யின் சாயல் ஒரு சிறிதும் இல்லை.
2. எந்த வடிவத்தையோ தந்து இ-யின் நெட்டோசை எழுத்து என்கிறார்கள்.

இதற்கு விடிவு, ‘இ’ என்பது ஒரு ஆலோசனை, அவ்வளவுதான். எளிமை ‘இர்’

5. மூன்றாவது நெட்டுயிர் ‘ஊ’

க. ஒரு குற்றுயிர் எழுத்து உ, இதன் நெட்டோசையை ஒரு உயிர் மெய் எழுத்தாலா பெறுவது.
உ. குறி – இதற்கு உயிர் மெய் எழுத்தை பயன்படுத்தக் கூடாது. குழப்பத்திற்கு இடம் தரும்.
ங – ஒரு குற்றுயிருடன், மற்றுமோர் உயிரும், மெய்யும் சேர்வது என்பது ஒரு மெய் (உடம்பு)யில் இரண்டு உயிர் தங்கமுடியாது.

6. விடிவு :

1. அ, அர், இ, இர், உ,உர்எ, எர், ஒ, ஓர் இப்படி நம்மிடம் இயற்கெனவே இருக்கும் இந்த ‘’ குறியினை பயன் கொள்ளலாம்.
இதனால்…
அகரம் முதல் னகரம் இறுவாய்
இருபத்தைந்து என்ப…
என்ற நிலைக்கு உயர்வோம்.

2. ஐ மற்றும் ஔ

இந்த இரண்டு எழுத்துக்களையும் ஆய்வு செய்து முடிவிற்கு வரவேண்டும். இந்தப் பொறுப்பை எல்லா பல்கலைக்கழகங்களும் சேர்ந்து செய்ய வேண்டும்.¢ இல்லை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமாவது முன் வந்து செய்ய வேண்டும்.
3. தரக்கட்டுப்பாடு நெறிகள் நல்ல முறையில் கை கொடுக்கும்
4. சரி செய்வது துன்பமாய் இருப்பின் எப்படி ஏற்றுக்கொள்வது என்று ஆய்ந்து ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

 

பேடு – 2 (மெய் எழுத்தில்)

சூத்திரம் – 9

‘ன கார இறுவாய்ப்
பதின்எண் எழுத்தும் மெய் என மொழிப’

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ப் ய் ர்

13 14 15 16 17 18
ல் வ் ழ் ள் ற் ன்

இவையே.

இப்பகுதியில் பேடு என்று சொல்லும் நிலையிலான எழுத்துக்கள் எதுவும் இல்லை. இந்த எழுத்துக்களில் ஒலி நெருக்கம் ஏற்படக்கூடாத அளவில் ந், ன் இல் இருப்பது முதல் நிலை.

இரண்டாவது நிலையில் இரண்டில் எது என்று தடுமாற்றம் விளைவிக்கும் எழுத்துக்கள் முதலில் நெருக்கம் மிக்கது.

ஒலி நெருக்கம் மிக்கது :
எட்டாவது எழுத்தான ந்
பதின் எண்ணாவது எழுத்தான ன்

ஒலி நெருக்கம் அதிகம்தான். இருப்பினும் ஏழாம் எழுத்தான த் – இதன் முன்னால் ன் வராது. ந் தான் வரும் என்பதை கொள்கையாக கடைப்பிடித்திட இக்குறையை எளிதாக மேற்கொள்ள முடியும்.

தரக்கட்டுப்பாட்டினடிப்படையில் மெய்யறி முறையின் கீழ் ஆய்வு செய்தால் உரியதும் உயரியதுமான தீர்வு கிடைக்கும்.

தடுமாற்றம் தரும் எழுத்துக்கள்:

பதினைந்தாவது எழுத்து ழ்
பதின் ஆறாவது எழுத்து ள்
பதின் இரண்டாவது எழுத்து ர்
பதின் ஏழாவது எழுத்து ற்
பதின் மூன்றாவது எழுத்து ல்

இவற்றில் ஏற்படும் குழப்பத்தை அடிப்படையான காரணம் உயரிய முறையில் கல்லாமையே.

இந்த எழுத்துக்களை அவற்றிற்கே உரிய உயரிய உச்சரிப்பை கடைப்பிடிப்பதின் மூலம் எளிதாக மேற்கொள்ள முடியும்.

 

பேடு – 3 (உயிர் – மெய் எழுத்துக்கள்)

சூத்திரம் – 17

‘புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவு உருவு ஆகி அகரமோடு உயிர்த்தலும்
ஏணை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆ ஈர் இயல் உயிர்த்தல் ஆறே’

மெய் எழுத்துக்களை செயல் ஆக்கத்திற்கு இட்டு வரும் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்களுடன் இணைய கிடைக்கப்பெறும் பிறப்பு எழுத்துக்களே உயிர்மெய் எழுத்துக்கள்.

இப்படி இணைந்திட ஏற்படும் ஒலி மாற்றத்தை, மெய்யின் வரிவடிவத்தை சிறிதும் சிதைக்காமல், உயிர் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அது அதற்கென்று பெற்றிருக்கும் ‘குறி’ வரி வடிவங்கள் இந்த மெய் எழுத்துக்களின் வலது, இடது மேல் கீழ் பக்கங்களில் நியமிக்கப்பட்ட நெறி அடிப்படையில் நெருங்கி நின்று, அது அதற்கான ஓசையை உணர்த்தும், இதன் மூலம் இயற்கை நீதியோடு இணைந்த அறிவியல் ஆதிக்கம் அறியப்படுகிறது.

1. உ, ஊ ஆகிய குற்றுயிரும், நெட்டுயிரும் ஆகிய இரண்டும் தலா மூன்று மூன்று குறிகளைப் பெற்று முரண்பட்டு நிற்பது கண்கூடு. இந்த இரண்டையும் ஏணைய உயிர் எழுத்துக்களைப் போல் தலா ஒரு குறியின் கீழ் கொண்டு வருவது நலம் சேர்க்கும்.

2. ஐ (அய்) இந்த நெட்டுயிர் இரட்டை ஒலியைப் பெற்றிருப்பினும் – இதன் பிறப்பு எழுத்துக்கள் ஒற்றை ஒலியையே பெற்றிருந்து நலம் சேர்க்கிறது. ஆய்வது நல்லது.

3. ஔ – இந்த நெட்டுயிர் தன்னைப் போலவே தனது பிறப்பெழுத்துக்களையும், இரட்டை ஒலிக்கும், ஒரு மெய்க்கு இரண்டு உயிர் என்ற இயற்கை நீதியின் அடிப்படைத் தத்துவத்தையும் சிதைத்தே நிற்கிறது. ஆக்கங்களும், உள்ள நிறைவு தருவதாக இல்லை.

4. சொல்லில் முதல் எழுத்தாய் வரும் வாய்ப்பில்லா மெய் – உயிர் மெய் எழுத்துக்கள் :
ங, ழ, ள, ற, ன என்ற அய்ந்து எழுத்துக்களுடன் ஆன அறுபது (60) உயிர் மெய் எழுத்துக்கள்.

5. மெய் பட்டியலில் 4, 15, 16 ஆவது எழுத்துக்களான ஞ, ஞோ, ஞௌ இம்மூன்றிற்கும் கூட சொற்களின் முதல் எழுத்தாய் வருவதற்கான வாய்ப்பு இல்லை.

6. பதினோராவது மெய்யின் யி, யீ, யெ, யே, யௌ, யோய ஆகிய ஆறு எழுத்துக்களுக்கும் மேலே பார்த்த நிலையே.

7. அய்ந்தாவது மெய் – இதன் டி,டு,டூ,டெ,டே,டொ,டௌ – இவற்றிற்கு மிகக் குறைந்த சொற்களே இருக்கின்றன.

8. பன்னிரண்டாவது மெய்யின் ர முதல் ரௌ வரை வரிசை எண் ஏழின் நிலையே.

9. பதின்மூன்றாவது மெய் ல முதலானவற்றிற்கு வாய்ப்பு குறைவானாலும் லைக்கு இல்லவே இல்லை.

10. மொத்தத்தில் 216 உயிர்மெய் எழுத்துக்களின் 146 எழுத்துக்களுக்கே சொற்களின் முதல் எழுத்தாய் வரும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றன. 70 உயிர்மெய்க்கு அந்த வாய்ப்பு இல்லை.

11. 42 உயிர்மெய் எழுத்துக்களுக்கு சொற்களின் முதல் எழுத்தாய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

12. அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் கொஞ்சம் குறை என்று சுட்டக்கூடிய அளவில் இருப்பது உ, ஊ என்கின்ற இரு குற்றுயிர், நெட்டுயிர் எழுத்துக்களுக்கான வரிவடிவ குறிகளில் மட்டுமே.

எல்லா உயிர் எழுத்துக்களும் தலா ஓரோர் வரிவடிவக் குறிகளை பெற்றிருக்க இந்த உ, ஊ மட்டும் தலா மூன்று வரிவடிவ குறிகளை பெற்றிருக்கின்றன. முரண்தான். மிகைப்படியாகத் தலா இரண்டு இரண்டு வரிவடிவ குறிகள். தமிழ் மொழி தாங்கி நிற்கும் இயற்கை சார் ஒழுக்கத்தில் படிந்துள்ள மாசு, நம் சிந்தனைக்கு.

13. தமிழ் அறிஞர்கள், அறிவியலார்களுடன் – கைகோர்த்து இணைந்து தரக்கட்டுப்பாட்டினடிப்படையையும் மனதில் வாங்கி முயற்சிகள் மேற்கொண்டால், உ, ஊ, இரண்டிற்கும் தலா ஒவ்வோர் ஏற்புடைய வரிவடிவக்குறி கிடைக்கும்.

14. எது எப்படி இருப்பினும் தமிழ் மொழியின் ஒலி வடிவத்தில் ‘ந’ ‘ன’ இந்த இரண்டு எழுத்திற்கும் இடையில் ஒலி நெருக்கம் சற்று அதிகமாக இருக்கிறதே, தவிர, வேறு கடுக்கத்தனை அளவில் கூட குறை இல்லை. இல்லவே இல்லை.

15. தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் காலத்தோடும், மானுடத்தின் வளர்ச்சியுடனும் இணைந்து படிப்படியாக எப்படி வளர்ந்து வந்துள்ளது என்பதற்கு, தேவைக்கு மிஞ்சிய சான்றுகள் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. வளர்ச்சியின் போது சிறுசிறு சறுக்கல்கள் இயற்கையே. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முன்பகுதி வரையிலும் அரங்கேற்றப்பட்டிருந்த நாக்கு துண்டிப்பு, கண்களைப் பிடுங்கி எறிதல், காதில் ஈயத்தை உருக்கிவிடுதல் போன்ற கொடுமைகளை எல்லாம் தாங்கி குறுகிப்போன நாம் இன்றளவும் கூட, இப்பயத்திலிருந்து மீ¢ள முடியவில்லை. எப்படியோ தாக்குப்பிடித்து வந்துவிட்டோம். இனிமேல் சுயநிலைக்கு திரும¢ப வேண்டும். அப்படித் திரும்புவதில் உள்ள சிரமங்களும், அதற்கான காரணங்களும் புரியாமல் இல்லை. மிரண்டுதான் இன்றளவும் வாழ்கிறோம். இத்துன்ப காலங்களை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட தமிழரல்லாதாரால் செய்யப்பட்ட, சீர்த்திருத்தங்களால் வந்த துன்பமே இந்த வடிவச் சிறுமைகள், உயிர் பெறுவோமேயானால் மீழ்வோம். நல்லதே நடக்கும்.

முடிவுரை

‘தீதும் நன்றும் – பிறர்தர வாரா’
(கணியன் பூங்குன்றனார்) – மனதில் கொள்வீர்.

என் வாழ்வும் என் வளமும், என் தாய் மொழியினை நான் பேணுவதைப் பொறுத்தே எனக்கு அமையும்.

நான் என்னைப் பேணா விட்டால் நான் அழிவேன்.

நான் என் தாய் மொழியைப் பேணாமல் போனால் என்னையும் சேர்த்து என் கலாச்சாரம் உட்பட அனைத்தையும் அழிக்கும் படுபாவியாவேன்.

சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு அடையாளம் அற்றுப் போய்க் கொண்டிருக்கிறதே! பஃறுளி ஆறு, லமோரியா கண்டம் கனவு காண்பது போல் இருக்கிறதே, நம் வரலாறு எங்கே?

மின்கலப் பேசியில் ஒருவர் – நான் உங்களை எதற்காக ‘கால்’ பண்ணி இருக்கேன் தெரியுமா – என்று பேசியபின் ‘ஓகேவா’ என்றார்.

நான் – ‘உங்கள் கால் உங்களிடம் இருப்பதும், என் கால் என்னிடம் இருப்பதும் இருவருக்கும் நல்லது.’ என்றேன்.

இழிவை – இழிவென்று கூட உணரவைக்க இயலவில்லையே. இப்படியே பழகிப் போனோம். திருந்தும் எண்ணம் என்றுதான் வரப்போகிறதோ.

பெரியவர் ஒருவர் எப்போதும் கூறுவர். ‘மானம், சூடு, சொரணை உள்ளவர்க்கு மட்டுமே இதெல்லாம் உறைக்கும்’ என்று இந்த இடத்தில் இது நினைவுக்கு வந்தது.

நாளும், நிமிடத்திற்கு நிமிடம் எதை எல்லாம் கற்பனை செய்து, பயந்து, பயந்து சாகிறோமே ஏன் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? புறநானுறு கண்ணீர் வடிக்கிறதே, கவலைப்படாதிருக்கிறோமே!

இப்படிப்பட்ட பயத்தால் நாட்டுப்பற்று மொழிப்பற்று, அன்பு, அறம் இவற்றுடன் உண்மையையும் சேர்த்தல்லவா புதைத்துப் போட்டோம். புதைத்தும் கொண்டிருக்கிறோம். சொரணையுடன் ஒருவன் வெளிப்பட்டால் அவன் நாட்கள் அன்று முதல் எண்ணிக்கையில் அடங்கிவிடுகிறதே.

நண்மை, தீமை அறிந்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கே எவ்வளவு பெரிய நினைவுச் சின்னம் எழுப்பி எப்படி அன்றாடம் அதனையும் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனது ஆய்வு பிழிசல் ஏட்டினைப் பாருங்கள்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின் என் தமிழின் உயிர் எழுத்து, மெய் எழுத்து இவற்றில் உயிர் எது? மெய் எது? எப்படி என்று இன்றுதானே கூற முடிந்தது. மன நிறைவிற்கு இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறதே.
இந்த ஏக்கம் என்னை அரித்தெடுக்கிறது.

காலம் கரம் கொடுக்குமா? பிடுங்கிக் கொள்ளுமா?

வள்ளலார் கூறியபடி செய்ய வேண்டியதைச் செய், செய்ய வேண்டியதை விட்டு வேண்டாததை செய்யும் எவரும் நற்கதி அடையார் என்று கூறி விட்டுவிடவில்லை. சத்தியமாய் அடையார் என்று உறுதிப்படுத்துகிறார்.

இக்கட்டுரைகளில் ஏற்க முடியாதன என்றிருப்பனவற்றை எடுத்துரைப்பீராயின், சரி செய்ய வாய்ப்புக் கிடைக்கும். பலர் சேர்ந்து இதனைச் செய்வோமாயின்,

அன்னை – தமிழ் அன்னை மகிழ்வார்கள்.
அன்போடு அரவணைத்து உச்சி மோந்து, முத்தமிட்டு, நல்லாசி வழங்கிட நம் குலம் வாழும், தலைமுறை வாழும். நீண்ட நல்ல வாழ்வை தந்து மகிழ்வார்கள்.

‘தரநெறியில் தொல்காப்பியம்’ என்ற நூலைப் படித்து, பயனுள்ள செயல் பல செய்ய முன் வருவோம்.
தரநெறி பார்வை தமிழை பல கண்டங்களுக்கு எடுத்துச்செல்ல தமிழ்ச்சுவையை உலகம் சுவைக்கும்.
இதைச் செய்வோர் வாழ்வாங்கு வாழ்வீர்.

வணக்கம்.