1. மாத்திரை என்பது மொழிக்கு மூலாமான ஒலியில் அளவினை குறிக்கும். அளவிற்கான அலகு, மொழி இயலில் இடம் பெறும் போது அது மாத்திரை என்ற பெயரைப் பெறும், என்பது தொல்காப்பியம்.

2. ஒலியானது மொழிக்கான மூலப் பொருள். இந்த மூலப்பொருளில் அடங்கியிருக்கும் பருமன் (Volume) தொடர் அடுக்கு நிகழ்வு (Frequency) ஆகியவைப் பற்றி மிக மிக பிற்காலத்தில்தான் உலகம் உணர்ந்தது. ஆனால், தொல்லாசானோ, இப்படி இரு கூறுகள் ஒலிக்கு உண்டு என்று கி.மு. ஓராயிரம் ஆண்டுகட்கு முன்பே அறிந்திருந்தார் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல இந்த தமிழ் சமுதாயம் தவறிவிட்டது என்பது மட்டுமல்ல; இந்த 21ம் நூற்றாண்டிலும் உணரத் தவறி, யாரோ எப்போதோ சொல்லிவிட்டுச் சென்ற ‘கால அளவு’ என்று இன்றும் கிளிப்பிள்ளை போல் கூறி வருவது, தூண்டியில் அகப்பட்ட மீன் போலும், கரைப்பட்ட மீன் போலும் என் போன்றோரைத் துடிக்கச் செய்கிறது. இயற்பியல் பேராசிரியர் ஒருவரை அணுகி இருந்தால் கூட தெளிவு என்றோ பிறந்திருக்கும்.

3. ஆறு மொழிகளுக்கு (என் அறிவில் பட்டது) தாய் மொழியாகவும், அவற்றில் தாய் உட்பட நான்கு பிள்ளை மொழிகளுக்கும் செம்மொழி தகுதியை தெளிவாய் சொன்னால்தான் ஈன்ற மூன்று மொழிகளுக்கும், செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்திருக்கும் என வேறு மொழி பற்றி தகவல் எங்கேனும் உண்டா? மேலும் உலகின் 180 மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும், 2700 மொழிகளுக்கு வேர் சொற்களையும் தந்துள்ளதையும் நாம் உணராதிருக்கிறோமே! அது மட்டுமல்ல சுட்டிச் சொல்லுமளவில் வெளிப்படையாக மெக்சிக்கோமய நாகரீகம், பிரேசில்கானா நாகரீகம் தமிழர் தொடர்பை பளிச்சென காட்டுபவை. இங்குள்ள சிற்றம்பல மேடைகள் அனைத்தும் நம்புகழ் பாடுபவை. என்ன இருந்து என்ன பயன்? என்னுடைய இந்£த ஆய்வும் புறக்கணிக்கப்பட்டுத்தானே இருக்கிறது. கவலைப்படாமல் என் பணியைத் தொடர்கிறேன்.
4. மாத்திரை சூத்திரத்திற்கு வருவோம்.

சூத்திரம் : 07

‘கண் இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே’

5. பொருள் கொள்ள வேண்டிய அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. எளிமையாகவே இருக்கிறது.

6. நுண்ணி அறியும் திறன் மிக்க அறிவார்ந்த மக்களுக்குத் தெரிந்த நிலையில் இயல்பான முறையில் நிகழும் கண் இமைத்தலும், கைவிரல்களின் நொடித்தல் ஒலியும் தான் எழுத்துக்களின் ஒலி அளவிற்கான அலகு. இந்த அலகின் பெயரே மாத்திரை.

7. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது :
கண் இமை என்றும்
நொடித்தல் என்றும் ஏன் சுட்டினார்?
இந்த இரண்டும் ஒன்றா?
நிச்சயமாக இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் எல்லா தன்மையிலும் வேறுபட்டவை என்பதனால்தான் தூய்த்து அறியும் அறிவுடைய மக்கள், சான்றோர்கள், ஆசான்கள் தெரிந்து வைத்திருப்பதன் படி என்று எடுத்துரைப்பதன் மூலம் சாமானியர்கள் இதனைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று முடிவெடுக்கிறார்.

8. முதலில் அறிக, இது மொழிக்கான ஒலி பற்றி பேசும் பகுதி. இது பற்றிப் பேசுபவர் தொல்லாசான் நூல் பெயரால் அறியப்படுபவர்.

கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். பிறந்த இடம் இன்றைய குமரி மாவட்டத்தில் இன்றும் இருக்கும் காப்பிக் காட்டில் பிறந்தவர். மக்கள் ‘நாட்டவர்’ என்று அறியப்படட்ட காலத்தில் உள்ள நாட்டவர் குலத்தில் பிறந்தவர். அக்காலம் எப்படி இருந்திருக்கும், சூழல் என்னவாக இருந்திருக்கும் என்பதை எல்லாம் லமூரிய கண்டம் தொடங்கி, பூகோளம், வரலாறு மண்ணூல் இடகிடப்பியல், இனப்பரப்பு விளக்கவியல் மொழி நூல் சார் ஆய்வு, மனித இன நூல் என பல்துறை அறிஞர்கள் ஒத்துழைப்புடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், மட்டுமே உண்மை வரலாறே நமக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி இருக்க அவரது ஆசிரியர் மாணாக்கர் என்றெல்லாம் பேசப்படும் குப்பைகளை ஒதுக்கிவிட்டு நாம் கண்ணாய் இருக்க வேண்டிய ஆய்விற்கு வருவோம்.

9. இயற்பியல் படிப்பில் ஒரு பகுதி சப்தம் (Sound) அதாவது ஒலி தொடர்பானதுதான். இதில் 18ம் நூற்றாண்டில்தான் ஒலியின் பருமனளவிற்கு அலகாக டெசிபெல்லையும் தொடர் ஏற்ற இறக்க நிலைக்கு அலகாக ‘கர்ட்சை’யும் (Hartg-Hg) கண்டார்கள்.

10. தொல்லாசானோ ஒலிக்கு இப்படி இரு நிலைகள் உண்டு என்று கிறித்து பிறப்பதற்கும் பல நூறு ஆண்டுகட்கு முன்பு அறிந்திருந்தமயால் பருமனை (எழுத்தொலிக்கு)வை நொடித்தலிலும், தொடர் ஏற்ற இறக்கத்தை இமைத்தலிலும் வைத்தார்.

11. இது மனிதனால் ஒரு குறிப்பிட்ட ஒலியினை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மிக முடியாது. அடக்கி எழுப்பப்படும் ஒலியே நொடித்தல். இதமான ஒலி.

இதற்கு தேவை மானுடன். அவனுடைய வலது கை. அந்தக் கையில் உள்ள பெருவிரல். மற்றும் நடு விரல்.
இதன் பிறகு இந்த விரல்களை இணைப்பது… இணைத்த விரல்களுக்கு அழுத்தம் தருதல். அந்த அழுத்த நிலையிலேயே சட்டென பிரித்தல் இச்செயலால் எழும் ஒலியே நொடித்தல்.
இப்படிப்பட்ட நிலையில் நம்முடைய பகுத்தறியும் திறன் சில விஷயங்களை நம்முள் எழுப்புகிறது.

12. அவற்றைப் பார்ப்போம்.

1. யார் நொடிப்பது?
2. நொடிப்பவர் தகுதி என்ன?
3. உடற் கட்டுப்பாட்டிற்கான வரையறை என்ன?
4. பயிற்றுவிக்கப்பட வேண்டுமா?
5. வயது வரம்பு உண்டா?
6. ஒருவருக்கு ஒருவர் இந்த ஒலி மாறுபடுமே. அதனை எப்படி ஈடு கொடுப்பது?
7. ஆடவர் நொடிப்பொலி ஏற்புடையதா?
8. பெண்டீர் நொடிப்பொலி ஏற்புடையதா?
9. இதில் இடைப்படும் செயல்களுக்கு வரைமுறை ஏதேனும் உண்டா?
10. இவற்றிற்கான நெறிமுறைகளை வகுத்து இந்த ஒலி அளவு என்று முடிவிட்டால்தானே பயன் கொள்ளும் நிலையில் தடுமாற்றம் ஏற்படாது.

மேலே பார்த்த பத்து நிலைகளுக்கும் முடிவு கண்டால் மாத்திரமே நொடித்தல் ஒலி பற்றி முடிவெடுக்க முடியும்.

13. மாநுடம் என்று வந்துவிட்டாலே முரண்தான். இதில் ஆழமாக தோண்டுவதைவிட, சராசரி உடல் கட்டுடைய ஆண், பெண் ஆகியோரில் பத்து பத்து பேரை தேர்வு செய்து ஒரு மாத காலம் நொடித்தலில் பயிற்றுவித்து, ஆடவர் நொடித்தலை தனியாகப் பதிவு செய்து, அவற்றிற்கு சராசரி ஒலியை தேர்வு செய்துகொள்ளலாம். பிறகு பெண் பாலினர் நொடித்தலையும், பதிவு செய்து, அதன் சராசரியையும் எடுத்த பின் இந்த இரண்டிற்குமான சராசரி ஒலிநிலையை நொடித்தல் ஒலி நிலைப்பாடாக கொள்வது நன்மை பயக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

எழுத்துக்களின் ஒலி மாநுடத்திற்கு இதம் தருவதாகவே இருக்க வேண்டும்.

இரண்டாவது ஒலி குறிப்பிட்ட ஓசைக்கு மேலே செல்லக்கூடாது.
இந்த இரண்டு நிலையையும் திருப்திப்படுத்தும் நிலைக்காகவும், மனிதனால் எளிதில் எட்டக்கூடிய நிலைக்காகவும் மட்டுமே நொடித்தலை ஐயன் தேர்வு செய்திருக்க வேண்டும் என்பது என் முடிவு. அக்காலம் ஐயனுக்கு இதைத்தான் கை கொடுத்திருக்கும்.

¤துபற்றி இன்னும் பகுத்தும் இவ்வளவு டெசிபல் என்று முடிவிட வேண்டும். இதுவே நொடித்தலுக்கான இன்றியமையா நிலை. (Decibels [dbj]).

14. ஒலி பற்றிய சிறு குறிப்பு:

பொருள்களில் ஏற்படும் அதிர்வே ஒலி. அது பொருளையும் அதிர்வையுயம் பொறுத்து அமையும். இது அலை வடிவில் மேலும் கீழுமாக கடந்து செல்லும். இந்த ஒலியானது, ஒலி அலைச் சிதைவு. அதன் பிரதிபலிப்பு, ஒலி சிதற்வு; எதிரொலி; இங்கும் அங்குமாக ஊசலாடும் நிலைகளுக்கு ஏற்ப இருக்கும். ஒலியின் வேகம் அது பயனிக்கும் இடைப் பொருளை பொறுத்து இருக்கும். காற்றினூடே ஒரு வினாடிக்கு 331 மீட்டர் வேகத்திலும் தண்ணீரில் 1450 மீட்டர் வேகத்திலும் இருப்பினூடே 5000 மீட்டர் வேகத்திலும் பயணிக்கும். இதற்கு அப்பாற்பட்ட நிலைகளும் நிரம்ப உண்டு.
இந்தத் தகவலை இத்துடன் முடித்துவிட்டு, நம் ஆய்விற்கு வருகிறேன்.

இமைத்தல் :

15. இமைத்தலை அனைவருமே இடைவிடாமல் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு யாருடைய உதவியும் வழிகாட்டலும் தேவையில்லை. மேலும் நாம் எல்லோருமே நன்கு அறிந்ததும்,

16. நம் கண்களில் அமைந்திருக்கும் மேல் இமையும் கீழ் இமையும் ஒன்றை ஒன்று தழுவிப் பிரியும் நிலைக்கான பெயரே இமைத்தல்.

கண்கள் :

17. கண்களில் கண்ணீர் சுரப்பி மேல் இமை, கீழ் இமை, கண்ணீர் தூம்புகள், கண்ணீர் பை; மூக்குத் தூம்பு; தொங்கவிடும் பதந்தகம் கருவிழி, கண்மணி வில்லை, கட்புலம் படாம், கருவிழி, விழிவெளிப்படலம்; விழித்திரை; பார்வை நரம்பு; விழி வெண்படலம் போன்றவை கண்ணின் முக்கிய பாகங்கள். இவற்றின் இயக்கங்களும் செயல்பாடுகளும் தனி.
18. கண்ணீரில் உப்பு (சோடியம் குளோரைட்) சிறிது சளி, முட்டைச் சத்து, (ஆல்ப்யூமென்) இது தவிர கண்ணிலுள்ள பாய் மரத்தின் லைசோசைம் என்ற கிருமி நாசினி அல்லது அழிப்பானும் சேர்ந்துள்ளது.

19. இங்கு நாம் பார்க்க வேண்டியது, கண்களின் இ¢கைள், இவை கண்களுக்கு மேலும், கீழுமாகவும் வெளிப்புறமாகவும் அமைந்துள்ளது. இவற்றின் முன்புறம் முடிகள் நிறைந்திருக்கும். இது கண்களுக்கு காவலும் கூட. அத்துடன் தேவை அற்றவற்றைத் தடுத்து, அவற்றை இதமாக துடைத்து அகற்றிவிடும் திறனும் இதற்கு உண்டு. அடிக்கடி மூடியும் திறந்தும் கண்ணை தூய்மைப்படுத்தும் பணியை சீராயும் சிறப்பாகவும் செய்து கொண்டிருக்கும். இப்படி மூடித் திறக்கும் இப்பணிக்கான பெயரே இமைத்தல். இது எந்தவிதமான அரவமும் ஈர்ப்பும் இன்றி, நிகழ்ந்து கொண்டே இருக்கும். இப்பணியை நாம் யாரும் பொருட்படுத்துவதும் இல்லை. அங்கீகரிப்பதும் இல்லை. இந்த பொருட்படுத்தாமையையும் அங்கீகரமின்மையையும் அது பொருட்படுத்துவதாகவும் இல்லை.

20. எந்தவிதமான ஓசையும், அரவமும் இன்றி நடைபெறும் இச்செயலை நொடித்தலுடன் தொல்லாசான் ஏன் இணைத்தார்? இந்த இமைத்தலுக்கான அலகு மாத்திரையா?

21. நொடித்தல் – நிறைவுறும் செயல். இதனை நாம் வலிந்து செய்ய வேண்டும். செய்வதன் மூலம் ஓர் சப்தம் வெளிப்படும். மிகக் குறுகிய கால அளவில் வறிந்து சிறிய மாற்றங்களை செய்ய முற்படலாமே தவிர, அதன் இயல்பான இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்க முடியாது. செவிமடுக்கவும் முடியாது. இமைத்தலுக்காக நாம் எந்தவிதமான சிரமத்திற்கும் ஆட்படவும் வேண்டாம். நாம் இமைப்பதை நமக்கு எதிரில் இருப்பவரால் பார்த்து உணர முடியுமே தவிர, இமைப்பவன் எதையும் உணரான்.

23. சூத்திரம் 7 இல்

‘கண் இம நொடி என அவ்வே மாத்திரை’ என்று இரண்டையும் சேர்த்துத்தான் மாத்திரை என்கிறார்.
கண் இமைத்தலும், நொடித்தலும் ஆன இரண்டும் இணைந்ததன் அளவிற்கான அலகே மாத்திரை என்றுரைப்பது மிகமிகத் தெளிவாகத் தெரிகிறது. இதனை

24. மேலும் விளக்குவதனால்,
1. ‘என’ எண்ணிற் பிரிந்து இரண்டிடத்தும் கூடிற்று.
2. இமைத்தல், நொடித்தல் என்னும் இரண்டு செயல் இங்கு தொழில் மேலும் நிகழ்வு மேலும் முறையே நிற்றலும்.
3. எழுத்துக்கு அளவாக இதனை இவர் உணர்ந்தமையால் இவ்வாறு கூறியுள்ளார்.
4. இயற்கை மகன் (உடல் நலத்தோடு இருந்து இயல்பாய் இமைப்பவன்) தன் குறிப்பு இன்றி இரண்டிமையையும் ஒருமுறை கூடச் செய்து நீங்கிய காலக்கழிவும் ‘அ’ எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக் கழிவும் ஒக்கும்.
5. இந்த இமைத்தலானது மெய்க்கு சார்பிற் நோற்றத்திற்கும் இதன் பாகம் மகரக் குறுக்கத்திற்கும் ஏற்புடையதென்பதையும் காண்க.
6. இமைத்தலும் நொடித்தலும் இரட்டித்து வரவைக்
குங்கால் அது நொடிக்கும். அதுவே இரண்டிற்
கதிகமாய் வருங்கால் அளவெடைக்கும் கொள்ளலாம்.
சிந்தித்தால் இமைத்தலும், நொடித்தலுமான இரண்டும் சேர்ந்தே மாத்திரை ஆயிற்று.
அடுத்தாற்போல் இமைத்தல் நிகழ்வுதான்.

25. நொடித்தலோ தொழிற்பாற்பட்டது. காரணம் ஒன்றைச் செய்வது தொழில். இந்தத் தொழில் நிறைவுற புலன்கள் ஒத்துழைக்க வேண்டும். முழு செயல் நிறைவு பெற வேண்டும். அதற்கு தேவை ஊக்கம், முயற்சி, இவற்றுடன் ஆற்றலும் இணைய வேண்டும். பின் திட்டமிடல், தேர்வு செய்தல், இணைத்தல், நகர்த்தல் என்ற நிலையில் நிறைவு பெறும்.
ஒத்துழைப்பு : மூளை, கண், காது, கைகள்
இதனைச் செய்ய : செய்ய வேண்டும் என்ற ஊக்கத்துடன் விரல்கள் தேர்வு. தேர்ந்து விரல்களை இணைத்தல்

ஆற்றல் : இணந்த விரல்களுக்கு உரிய அழுத்தம் கொண்டு வருதல்.

நகர்த்தல் : ஆற்றல் பெற்றுள்ள விரல்களை அப்படியே நகர்த்தி வெடுக்கென பிரிக்க ஓசை வரவேண்டும்.

26. மேலே பார்த்தவற்றில் ஏதாவது ஒன்று இமைத்தலுக்கு வேண்டுமா? ஆனால் தொடர்ந்து நிறைவுற்றுக் கொண்டே இருக்கும். இதற்குக் காலக்கழிவு பொருந்தும். அதாவது நொடித்தல் ஒலி செவிப்புலனை சென்றடைய ஆகும் நேர அளவையே இந்த இமைத்தல் அறிவுறுத்துகிறது. ஒலி இயல், மின்சார இயல், ஆகியவற்றில் வரும் அடுக்கு நிகழ்வு (Simple Harmonic Motion) Frequencyயையே இது குறிக்கும். தமிழ்ச் சான்றோர் தம் தொலைதூரப் பார்வைக்கு இது சான்றாகி நிற்பதுடன் மொழி இயலில் நொடித்தல் இமைத்தல் என்ற இரு நிலையின் இணைவு அளவிற்கான அளவின் அலகே மாத்திரை. தமிழ் ஒலியின் அலகு.

27. சூத்திரம் 3 இல்

அ, இ, உ, எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும் குற்று எழுத்து என்ப.

28. சூத்திரம் 4 இல்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்
ஓர் அளவு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

29. சூத்திரம் 11 இல்
மெய்யின் அளவே அரை என மொழிய

30. சூத்திரம் 12 இல்
அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே

31. சூத்திரம் 5 இல்
மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே

32. சூத்திரம் 6 இல்

நீட்டம் வேண்டின் அவ் அளபு உடைய
கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்

33. சூத்திரம் 13இல்

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசை இடன் அருகும் தெரியும் காலை

34. சூத்திரம் 33 இல்

அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்

35. இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ள 8 சூத்திரங்கள் மூலம் மாத்திரையின் எத்தனை எத்தனை எவ்வளவு என்பதை எல்லாம் அவ்வளவு எளிமையாக எடுத்துச்சொல்லி விட்டார். இப்போது நம் கடமை என்ன?

ஐயன் கூறியிருப்பதின் உண்மை நிலைகளை உறுதி செய்ய வேண்டும். எழுத்தொலிக்கு மாத்திரைதான் அலகு என்பதனை உலகிற்கு சொல்ல வேண்டும். இதன் பின் சூத்திரம் 11இல் சொல்லப்பட்டிருக்கும் மெய்யின் ஒலிநிலை அறிதல் வேண்டும். ஒலிப்பு இல்லாமையால் அரனை விட்டுவிட்டு சூத்திரம் 3றினை ஆய்வோம்.

36. அ, இ, உ, எ, ஒ இதற்கு ஒரு மாத்திரை என்று ஒலி அளவைத் தருகிறார். அத்துடன் இந்த ஐந்து எழுத்துக்களும் குற்று எழுத்து என்ற பெயரையும் சூட்டுகிறார். இந்த ஒரு மாத்திரைக்கு தொல்லாசான் தரும் ஒலி நிலைப்பாடு நொடித்தலும், இமைத்தலுமாகும். இதன் அடிப்படையில் இந்த ஐந்து எழுத்துக்களையும் ஒலிக்கச் செய்து, நொடித்தல் ஒலியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும்.

37. இந்த ஐந்து எழுத்தின் ஒலி அளவை உறுதி செய்ய வேண்டும். இது உச்சரிப்பாளர்களின் நிலையைப் பொறுத்து அமைவதன் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

38. முதலில் இதனை எப்படி செயலாக்கத்திற்குக் கொண்டு வருவது என்பது முடிவிடப்பட வேண்டும். என் அறிவிற்குட்பட்ட வரையில்,
1. நல்ல வளமான குரல்
2. தெளிவான உச்சரிப்பு திறம்

39. இந்த இரண்டு திறனுடையோரை தேர்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் பயிற்றுவிப்பது, இங்கு இன்றியமையாத தேவை, ‘இயல்பான நிலை’. இந்த நிலையில் நின்று தெளிவாக உச்சரிக்க வேண்டும். அப்படி அவர்கள் உச்சரிப்பதை, உரிய பொறிகளில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவானவற்றை இத்துறை வல்லுனர்கள் உதவியுடன் ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

40. அப்படி தெளிந்தபின்பு மாத்திரைக்கு முடிவெடுத்துள்ள ஒலி அளவுடன் ஒப்பாய்வு செய்தால் இந்த ஒலிகளின் ஒருமைத்தன்மை அல்லது வேறுபாடு தெரிய வரும். ஒருமைத்தன்மை சரியான நிலை. வேறுபாடு இருப்பின் அதன் உண்மை நிலையை ஆய்ந்து, அறிந்து தெளிந்த பின்பு மட்டுமே அறிஞர்கள் உதவியுடன் முடிவிற்கு வர வேண்டும்.

41. இதற்கு அடுத்தாற்போல் சூத்திரம் 4கை பார்ப்போம்.
‘ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழும் ஈர் அளபு இசைக்கும்’
இந்த ஏழு எழுத்திற்கும் இரண்டு மாத்திரை ஒலி அளவு என்று கூறியதுடன், நெட்டெழுத்து என்ற பெயரையும் சூட்டுகிறார்.

42. இதே நிலையில் இந்த எழுத்துக்களை பலமுறை ஒலித்துப் பாருங்கள். இதில் உள்ள ஐயும் ஔவும் மாறுபட்டு ஒலிக்கும். ஓர் எழுத்துக்கான நீட்டல் ஓசை நிலை இந்த இரண்டு எழுத்துக்கும் கிடையாது. ஆம் இந்த இரண்டு எழுத்துக்கும் குற்றோசை எழுத்து கிடையாது. இதனால் இந்த இரண்டும் அந்தரத்தில் நிற்கும்.

43. கவனமாக ஒலித்தால் இரட்டை ஒலி இருப்பது தெரிய வரும். பத்து உயிர் எழுத்துக்கும் ஒற்றை ஒலிதான். அதனால் அவற்றை அதனதன் நிலையில் பதிவு செய்ய முடியும். இதனை பதிவு செய்தால் நிலை வேறாக இருக்கும். இப்போதைக்கு இதனை இப்பகுதியில் விட்டுவிட்டு நம் ஆய்விற்கு வருவோம். இதனை ஆர்வமுள்ள புலவர்கள் ஆயட்டும். வாய்ப்பு வரின் நாமே கூட ஆயலாம். இப்போது இந்த எழுத்துக்களுக்கு இரண்டு மாத்திரை ஒலி என்பதே. இதனை அறிய வேண்டும்.

44. இந்த சூத்திரத்தின் படி இரண்டு நொடித்தல், இமைத்தல் நிலை ஒன்றாய் வரவேண்டும். அதாவது இரட்டித்த மாத்திரை ஒலி வரவேண்டும்.

இந்த இரு மடங்கு நிலையை அன்று தொல்லாசான் நடைமுறையில் முயன்று பார்த்திருப்பாரா என்ற அறிவு நமக்கில்லை. அப்படிப் பார்க்க வேண்டுமாயின் இரண்டு நொடித்தல் வல்லுனர்களை அமர்த்தி, சமிக்ஞை மூலம் ஒரே நேரத்தில் இருவரையும் நொடிக்க வைத்துக் கேட்டிருக்கக் கூடும். ஆனால், அதன் நுண்ணிய நிலை சிந்திப்பதற்குரியது.

45. முன்பகுதியில் குற்றொலி பற்றி அறிய கூறப்பட்ட அதே அணுகுமுறையில் இந்த இரண்டு மாத்திரை ஒலிக்கு தீர்வு காண்பதுவே தீர்வு.

46. தனிமைப்படுத்தப்பட்ட ஐ.ஔ இரண்டினையும் தனியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது அந்த இரண்டின் நிலைமையையும் கண்டறிய முடியும்.

47. இதே அடிப்படையில் எஞ்சியுள்ள சூத்திரங்கள் 11, 12, 5, 6, 13, 33 ஆகியவற்றிற்கும் மாத்திரை நிலையை அறிய முடியும்.

48. பதிவு செய்யும் பொறிகள் மூலம் இதற்கான வரைகட்டப் பதிவு (Graph) பதிவு மூலம் ஒலி அலையையும் பதிவு செய்வோமேயானால் ஓசையின் சீர்நிலையை அறிய முடியும். இந்த அலையில் ஏற்படும் மாற்றங்கள் ஒலியின் சிதைவை சுட்டும். இதற்கான படிகளை தயார் செய்தால் வரைகட்டம் காகிதத்தில் (Graph Paper) நாம் தயாரிக்கும் மெய் குறிப்புகள் மூலம் (Data) ஏற்ற இறக்க வேறுபாடுகளை ஓர் அளவிற்கு அறிய முடியும்.

49. இப்படி எல்லாம் அறிந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்கின்ற ஐயம் எழலாம்.

50. ஒரு மொழியின் சீரும் சிறப்பும் எதில் அடங்கி இருக்கிறது என்பதை ஆய்ந்தால் இந்த ஐயம் போகும்.

1. நிறைந்து காணப்படும் அறிவியல் அடிப்படை
a) உயிர்
b) மெய்
c) உயிர்மெய்

இந்த தத்துவம் மொழியில் அடங்கியுள்ள இயற்கை கோட்பாடு மொழியின் இயற்கை இயல்பு நிலையை சுட்டுவதுடன் கட்டிறுக்கத்தை பறைசாற்றுகிறது.

2. மொழியின் எழுத்து ஒலி ஒவ்வொன்றுக்கும் அலகு (ஹிஸீவீt) அளவு இவ்வளவு என்று அளந்து தந்திருப்பது நிலை குலையா எடுத்துக்காட்டு.

3. மொழி ஒலியில் இருக்க வேண்டிய இதம் ஒலிக்கு அலகு அமைத்துள்ளமையால் பேணப்படும் விஞ்ஞான நிலை நிறுவப்படுகிறது.

4. இந்த ஒலியின் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் மாத்திரை அளவால் எப்படிக் கட்டிறுக்கமாக வைத்துள்ளது என்பதைக் காட்டும்.

5. வாழ்வியலில் ஒழுக்கம் எப்படி பேணப்பட வேண்டுமோ, அதற்காக வரையறை செய்யப்பட்டுள்ள விதிகளுக்கேற்ப இவை அமைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெருமைக்குரியது.

6. தரக்கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட்டதும், தரக்கோட்பாட்டடிப்படையில் தமிழை ஆய்வு செய்ய முடியும் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.

இவற்றின் மூலம் மொழியின் தன்னிகரற்ற சிறப்புகள் அனைத்தையும் நம்மால் உலகிற்கு நிரூபித்துக்காட்ட முடியும்.