இந்தப் பகுதியில் நூல் மரபில் விட்டு வைத்திருக்கும் சூத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாய்ப் பார்ப்போம். இதன் பின் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் காலவாரியான வளர்ச்சிப் பட்டியலை சித்திர எழுத்துக்களில் சிலவை என தொடங்கி தந்துள்ளேன்.

சூத்திரம் ஒன்றின் முன்பகுதியை பார்த்து விட்டோம். அதன் பின் பகுதியைப் பார்ப்போம்.

“சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே”
சார்ந்து=ஒன்றை அடிப்படையில் தாங்கி
வரல்=வருவது
மரபு=வழக்கு முறை, முறைமை
அலங்கடை=அல்லாத இடத்து
இதன் பொருள் சார்பு எழுத்துக்கள் மூன்றுமே இல்லாமல் இருக்கும் பொழுது, நெருடல் மிக்க பகுதி.

இங்கு நாம் அறிய வேண்டியது, எவை சார்பு எழுத்துக்கள் என்பதாகும்?

இதற்கு ஆசானே சூத்திரம் இரண்டைப் பதிலாக வைக்கிறார். எனவே சூத்திரம் இரண்டைப் பார்ப்போம்.

சூத்திரம்-2

அவை தாம்

குற்று இயல் இகரம்; குற்று இயல் உகரம்
ஆய்தம் என்ற
முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன”
இது, இ; உ; மற்றும் ஃ ஆகிய மூன்றுமே.

மூன்று+பால்=முப்பால்
மூன்று=3
பால் = வேறுபாடு
அன்ன=அவை போல்வன
மேலே பார்த்த மூன்று குறுகிய ஓசை உடைய சார்பு எழுத்துக்களும் எழுத்துக்கள் போல்வன என்கிறார்.

இது என்ன? போல்வன!

இதன் உட்பொருள் என்ன? ஒழுங்காய் ஆய்வு செய்தும் உண்மையை வௌயே கொண்டு வருவதும் நம் கடமை காரணம் சூத்திரம் மூன்று (3) ஆயுத் எழுத்தை தவிர்த்து மீதமுள்ள இ, உ வை ஓர் அளபு இசைக்கும் குற்று உயிர் எழுத்து என்று கூறுபகிறது. சூத்திரம் எட்டு (8) இந்த இயையும் உவையும் மட்டும் உள்ளடக்கி “ஔகார இறுவாய் பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப என்கிறது. இந்த இரண்டு இடத்திலும் ஆய்த (ஃ) சுட்டப்படவில்லை. சூத்திரம் 9 திலும் “ன கார இறுவாய் பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப” ஆய்த எழுத்தான ஃக்கு அதுவே மெய் எழுத்தில்லாமையால் இங்கும் இடம் இல்லை. அதே வேளையில் சூத்திரங்கள் 24 மற்றும் 26 இல் “ல, ள, ஃ கான் முன்னர் ய, வ வும் தோன்றும் என்றும்”, “ண, ன, ஃ கான் முன்னர்க் க, ச, ஞ, ப, ம, ய, வ அவ் ஏழும் உரிய” இப்படி இரண்டு சூத்திரத்தைச் சொன்னபோதும் உரை ஆசிரியர்கள் இந்த ஃ கை அவர்கள் உரையில் இடமளிக்காமலும், கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது ஏனோ? இதுபோன்ற பிரச்சனையில் ஆழ்வது அறிவுடமை இதில் வழுக்கி செல்வது பொறுப்பின்மை போல் தோன்றுகிறதல்லவா!

இது மொழிக்கும் நம் பின் சந்ததியினருக்கும் நாம் செய்யும் பெரும் தவறாகவே எனக்குப்படுகிறது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சூத்திரங்கள் 24இம் 26உம் மெய் மயக்கம் என்ற தலைப்பின் கீழ் வருவதால், ஆய்த எழுத்தான ஃ மெய் எழுத்தா?

இல்லை!

பின்னர் எப்படி மெய் மயக்கம் என்ற தலைப்பின் கீழ் உள்ள சூத்திரங்களின் கால் பதித்தது?

மீண்டும் சூத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டால் இ, உ, ஃ இந்த மூன்றும் நீங்களாக முப்பது எழுத்து எப்படி வரும், இந்த மூன்றையும் தானே சூத்திரம் இரண்டு சார்பு எழுத்துக்கள் என்று கூறுகிறது! அதோடு நில்லாமல் “முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன” என்று கூறுவது நம் அறிவுத்திறனுக்கு இன்று விடப்படும் சவாலாகவே எனக்குப் படுகிறது. நூலின் குறையாக எனக்கு தோன்றவில்லை.

இந்த இடத்தில் சூத்திரம் 12அய் நினைவிற்கு கொண்டு வருவோம். “அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே” இது மாத்திரை என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளதால் ஒலி சார்ந்த நிலை; ஆம் மூன்று சார்பு எழுத்துக்களும் அரை மாத்திரை ஒலி அளவினையே பெற்றிருக்கிறது.

சூத்திரம் 3இல் இதே “இ”யும், “உ”வும் குற்றுயிர் எழுத்துக்களுடன் இடம் பெற்று ஒரு மாத்திரை ஒலியைப் பெறுகிறது. சூத்திரம் 8இல் உயிர் எழுத்து வரிசையில் மூன்றாம், அய்ந்தாம் இடங்களைப் பிடித்துள்ளது. கூர்ந்து பார்த்தால் ஏதோ ஒரு நுட்பம் புதைந்து கிடக்கிறது. கி.மு.வில் ஆசானுக்கு தெரிந்த இந்த நுட்பத்தை அறிவதும், நிறுவுவதும் இன்றுள்ள நம் கடமை.

சூத்திரம் 13இல் மகர மெய் இசையோடு இணையும் காலத்தில்  மாத்திரையாகக் குறுகும் என்று இடம், பொருள், ஏவல் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றமும், இறக்கமும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி ஒரு மாத்திரை அரை மாத்திரையாகக் குறுகும் என்று குறிப்பிட்டிருந்தாலும் குழப்பம் குறைவாக இருந்திருக்கும். ஆனால் சார்பு எழுத்துக்களுக்கு சொல்லப்படும் அனைத்தும் ஆழமான சிந்தனையையல்லவா வற்புறுத்துகிறது!

சூத்திரங்கள் 14உம், 16 உம் ஆசான் காலத்து நிலை. சூத்திரம் 15 கூறும் மெய் எழுத்துக்கள் புள்ளியுடன் நிற்பது இன்றும் தொடரும் நிலை. இந்த சூழல்களை மனதில் வைத்து ஆழமாய் ஆய்ந்தால் விடிவு நிச்சயம் கிடைக்கும். தரக்கோட்பாட்டு நெறி நல்ல முடிவைத் தரும்.

இதனைத் தொடர்ந்து உயிர் எழுத்துக்களையும், மெய் எழுத்துக்களை சூத்திரங்கள் 23 முதல் 30 வரையிலும் பார்த்தது போன்ற நிலையில் பார்க்கிறார். அதுவே:

சூத்திரம் 31 இல்

அ, இ, உ அம் மூன்றும் சுட்டு”
சுட்டு=குறிப்பிடுகை; சுட்டெழுத்து என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி.
என் மனதில் இது, இதுதான்; அது; அதுதான் என்பன போன்று ஒன்றை சுட்டிக் காண்பிப்பதே சுட்டு என்று படுகிறது.

எடுத்துக்காட்டாக
அவள், அவன், அது
இவள், இவன், இது
உம்மை, உங்களை, உம்மவர்
மாத்திரை நிலை இங்குள்ள இந்த ‘இ’யிலும். ‘உ’விலும் மாறுபடாமையால் குற்றுயிராகவே செயலாக்கம் புரிகிறது.

சூத்திரம் 32

“ஆ, ஏ; ஓ, அம்மூன்றும் வினா”
வினா=கேள்வியாக கேட்க பயன்படும் எழுத்துக்களான உயிர் எழுத்துக்கள்

எடுத்துக்காட்டு:

அவளா? இதில் ளா என்ற உயிர் மெய்யில் “ஆ”
ள் + ஆ=ளா என்ற நிலையில் மறைந்து செயலாற்றுகிறது.
அவளே? இதில் ள்+ஏ=ளே ஆகவும்
அவளோ? இதில் ள்+ஓ=ளோ ஆகவும்
ஆ, ஏ, ஓ என்ற மூன்று நெட்டுயிர் எழுத்துக்களும், மேலே பார்த்த எடுத்துக்காட்டுக்களில் காணப்படும் “ள்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து உயிர் மெய் எழுத்தானளா; ளே, ளோவில் ஒழிந்து செயல்படுவதை காண்கிறோம்.

இவை எல்லாமே மொழியில் புதையுண்டு கிடக்கும் மொழி ஒழுக்கத்தையும் பண்பாற்றலையும் நெறி பிறளா தன்மையையும் பறை சாற்றி நிற்பதை உணர முடியும்.
நூல் மரபின் கீழ் உள்ள 33 சூத்திரங்களில் இந்த இகரம், உகரம் பற்றிய சிறு பட்டியல் ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது.

அது:
1.    சூத்திரம்    1    இயும், உவும் எழுத்தாக அறிமுகமாகிறது.
2.    சூத்திரம்    8    உயிர் எழுத்தாக அறிமுகமாகிறது.
3.    சூத்திரம்    3    குற்றுயிராகப் பிரித்து அறிமுகப்படுத்தப்படுகிறது.
4.    சூத்திரம்    3    லேயே ஒரு மாத்திரை ஒலி வெற்றிருப்பதாக சூத்திரம் சொல்கிறது.
5.    சூத்திரம்    31    இந்த இயும்; உ வும், சுட்டு எழுத்தாக, உயிர் எழுத்து நிலையிலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது.
6.    சூத்திரம்    1    இதன் பின்பகுதியில் சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே என்று குறிப்பிடப்படுகிறது.
7.    சூத்திரம்    2    அவைதாம் குற்று இயல் இகரம் குற்று இயல் உகரம் என்று அறிமுகமாகிறது.
8.    சூத்திரம்    2    லேயே எழுத்து ஓர் அன்ன என்று கூறப்பட்டுள்ளது.
9.    சூத்திரம்    10    இவை உயிர் எழுத்து என்ற நிலையில் மெய் எழுத்துக்களுடன் சேரும் நிலை பேசப்படுகிறது.
10.    சூத்திரம்    12    இந்த ‘இ’க்கும், ‘உ’வுக்கும் அரை மாத்திரை ஒலி தரப்படுகிறது.
11.    சூத்திரம்    17    மெய்யோடு சேர வடிவம் திரிந்து அமைவது கூறப்படுகிறது.
12.    சூத்திரம்    33    இல் இவையும் இசையில், இசையில்

இசையோடு பொருந்தி ஒலிக்கும் எனல்,
அன்றைய காலக்கட்டத்தில் தன்னால் இயன்றதைக் காப்பிக் காட்டாசான் நமக்கு; தமிழுக்கு தந்தார். அவர் தந்ததை நுணுகி, நுணுகி ஆய்ந்து அறிந்ததை உலகிற்கு தரவேண்டியும் உலக மொழிகள் எல்லாம் கூட தர கோட்பாடுகளைப் பின்பற்றி அந்தந்த மொழிகளின் சிறப்புகளை எல்லாம் உலகிற்கு அறிவிக்க முடியும். இதற்கு முன்னோடியாக நாம் நம் தமிழ் மொழியினை உலகுக்கு அறிமுகம் செய்வோம். நம் பாரமுகம் நம் அடையாளத்தை அழித்துப் போடும்; தமிழ்: பேதையர் கூற்றுக்கு ஆட்படும்.

ஒன்று படுவோம்

தமிழ் தழைக்கப்பாடுபடுவோம்.
வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!!

சில சித்திர எழுத்துக்கள் தொடங்கி காலம் தோறும் தமிழ் எழுத்துக்கள் பெற்ற வளர்ச்சி பட்டியலையும் பாருங்கள்.

pic-1 pic-2 pic-3 pic-4 pic-5