இந்த பகுதியில் தொல்காப்பியம் – பொருளதிகாரத்தின் மரபியலில் அடங்கியுள்ள சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரையிலான ஏழு சூத்திரங்களை-வாழ்வன (living) பகுதியில் நிறுத்தி – இவற்றினுள் நிலைபெற்றுள்ள ஆறு அறிவுகள் எப்படி பார்க்கப்பட்டுள்ளன எந்தெந்த உயிரினங்களில் எத்தனை எத்தனை அறிவுகள் அடக்கம் என்பதைத் தெளிவுபடுத்தும் பகுதிகளை ஆய்வோம்.

இவற்றின் முத்தாய்ப்பான பகுதி “மக்கள் தாமே ஆறு அறிவுயிரே…” என்று முடித்த பகுதியுடன், சூத்-1526 அய் தொடர்பு ஏற்படுத்திட மலைப்பு ஏற்படுகிறது. மலைபகல ஆய்வோம்.

மரபியல்

சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரை

பொருளதிகாரத்தில் செய்யுளியலுக்கு நிகரான ஒரு பகுதி இந்த மரபியலில் வரும் சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரையிலான ஏழு சூத்திரங்கள்.

மரபியலை நான்கு கூறுகளில் நான் பார்த்தேன்.

1. அஃறினை பொருள்களுக்கு பெயர் காணல்
சூத்திரங்கள் 1500 முதல் 1525 வரையும்
1533 முதல் 1550 வரையும் (வாழ்வனவற்றின் பெண்பால் பெயர்களாகவும் வருகின்றன.

2. உயிர் வேறுபாடு: தரப்பட்டுள்ள தலைப்பு
“வாழ்வனவற்றை அவற்றின் அறிவு அடிப்படையில் காணல்”
சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரை, பின்னர்
1585 முதல் 1588 வரை ஓர் அறிவுடையனவற்ற மட்டும் பார்த்தல்

3. நாலு வர்ணம்: (மநுதர்ம நூலின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது) (தொலாசான் காலத்தில் இல்லாத இந்த பொல்லா நிலையை கொஞ்சம் வரலாற்றறிவும்; கால அறிவும்; இலக்கிய அறிவும் உடையோர் ஏற்க மறுக்கும் பகுதி)

(குமரி மாவட்டத்தில் இன்றும் இருக்கும் காப்பிக்காட்டு என்ற ஊரில் பிறந்தவர். காப்பியக்குடியில் அல்ல. சான்றோர் குடியில் பிறந்தவர். இன்றும் அந்த இடம் அப்படியே இருக்கிறது. இந்த மாவட்டத்தில் சான்றோர் ஆண்களை ஆசான் என்றும் பெண்களை ஆசானி என்றும் அழைப்பார்கள்).

சூத்திரங்கள் 1570 முதல் 1584 வரை

4. நூல் (செய்யுள்) 1590 முதல் 1592 வரையும்
1593 முதல் 1610 வரையும்
ஆக மொத்தம் 111 சூத்திரங்கள்.

இதில் இரண்டாம் பிரிவில் அடங்கும் சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரை ஏழு சூத்திரங்களை மட்டும் பார்க்க முனைகிறேன்.

5. உலகம் – இது ஒரு நிலை.

இந்த உலகின் இரு பெரும் கூறு நீர்பரப்பு, நிலப்பரப்பு
இந்த இரண்டிலும் நிரம்பி இருப்பது பொருள்கள்
இந்த பொருள்களின் இரு பெரும் கூறு வாழ்வன, வாழாதன.

6. இதில் நமது ஆய்விற்குரிய பகுதி “வாழ்வன”

வாழ்வனவற்றிடம் உடல் என்று ஒன்றும் உயிர் என்று ஒன்றும் இருப்பதாலும், ஆணும், பெண்ணும் என பிரிந்தும் இணையாக வாழ்வதாலும் அவை வாழ்வன. இணை இல்லாவிட்டால் அவை வாழாவெட்டி. இது தமிழ் மரபு, உற்றுப் பார்த்தால் உலக மரபும் கூட.

7. இந்த வாழ்வனவற்றை அறிவின் அடிப்படையில் பார்த்தவர் தொலைநோக்கு பார்வை மிக உடைய தொல்லாசான். இந்த வாழ்வனவற்றிற்கு அதிக அளவாக ஆறு அறிவையும் குறைந்த அளவாக ஒரு அறிவையும் கூறுகிறார். இதனை இதுவரையிலும் மறுத்துக் கூறியவர்கள் இல்லை என்றும் அறிகிறேன்.

8. சூத்திரம் 1526ஐ இறுதியில் பார்ப்போம். காரணம் இந்த சூத்திரம் எந்த அறிவுடைய பிரிவிற்கு சொல்லப்பட்டுள்ளதில் உரை ஆசிரியர்கள் கூற்றில் உடன்பாடு இல்லாமையே. இந்த சூத்திரம் மிக அதிகமாக ஆழ்ந்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்பது என் கருத்து.

இப்போது சூத்திரம் 1527ஐ பார்ப்போம்.

ஓர் அறிவுடையன

“புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளை பிறப்பே”

மிக எளிமையான சூத்திரம். தாவர இனங்களான புல் முதலான மரம், செடி, கொடி வகைகள் அனைத்தும் ஓர் அறிவுடையன என்று தெளிவாகக் கூறுகிறார்.

சூத்திரத்தில் புல்லையும், மரத்தையும் சுட்டியமையால் பிறவும் உளவே அக்கிளை பிறப்பே என்று இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டதும் இதன் கிளை இனங்களுக்கும் ஒரு அறிவு மட்டுமே உண்டு என்கிறார். அது எந்த அறிவு? குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.

மரத்திற்கு உயிர் இருக்கிறது. அதனால் உண்கிறது; தண்ணீரும் வேண்டும்; பின்னர் இளமை, வளர்¢ச்சி, இனபெருக்கம் எல்லாம் இருப்பதால் வாழ்வன என்பதில் சந்தேகம் இல்லை.

ஓர் அறிவு-அப்படியானால் எந்த அறிவு? இரண்டாம் அறிவு முதல் ஐந்தாம் அறிவு வரைக்கும் வாய்ப்பில்லை, இருந்தால் வெளியில் தெரியும், காரணம்,  இரண்டு நாவு; மூன்று மூக்கு; நான்கு கண், ஐந்து செவி. இவை நான்கும் உறுதியாக இல்லை. மீந்தது உற்று அறியும் அறிவான முதல் அறிவும், ஆறாவது அறிவான் மனனேயும், இந்த இரண்டில் எது? இந்த இரண்டும் தான் மறைவாய் இருப்பதும், உணரப்படுவதும். எனரே இந்த இரண்டில் எது என்பதை கண்ணை மூடிக் கொண்டு சொல்லக்கூடாது. காரணம் இரண்டு முதல் ஐந்து வரையிலான அறிவுகள் அதனதன் செயலை நிறைவு செய்கின்ஹன. அதனால் அவற்ஹைப் போல் ஒன்றும் ஆறும் அது அதற்கான செயலைச் செய்ய வேண்டும். அச்செயலை அடையாளம் கண்டால் இங்குள்ள

சூத்திரம் 1586

“தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லோடு வரும் எனச் சொல்லினர் புலவர்.

பனை தென்னை போன்றவற்றிற்கு
தோடு மடல் ஓலை
ஏடு இதழ் பாளை (இவற்றின் பூ)
ஈர்க்கு (ஓலை கீற்றின் நடுவில் இருக்கும் நரம்பு போன்ற அமைப்பிற்கு ஈர்க்கு என்று பெயர்.
குலை (இவ்வகை மரங்களின் தலையாயது)
என்பனவற்றை தெரிதல் வேண்டி சுட்டுகிறார்.
சூத்திரம்: 1587 இல் மரங்கலுக்கான உறுப்புகளை சுட்ட முற்படுகிறார்.

இலையே முறியே தளிரே கோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனை உள் உறுத்த அனையவை எல்லாம் மரனொடு வரூஉம் கிளவி என்ப

மரத்தின் உறுப்புகளாக இலைகளையும்; மரத்தின் வளர்ச்சிக்காக அவற்றில் தோன்றும் துளிர்களை கூறி தளிர் இலை; இந்த இலைகளை தாங்கி நிற்கும் கிளைகளை கோடே என்றும்; அவைகளில் அரும்பும் மொட்டுகலை சினையே என்றும்; தளிர்க்கும் இலைகளை குழை என்றும்; அவற்றிடை தோன்றும் பூக்களையும், அரும்புகளையும், இவையன்றி அரும்புவனைவற்றை நனை என குறித்து இவை அனைத்தையும் உறுப்புகள் என கண்ணிற்கு அதாவது புலனறிவிற்கு தென்பட்டதை காட்டி, எனது காலத்துக்கு இதற்கு மேலே காட்டுவதற்கான வாய்ப்பு இல்லாமையை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் நிலை இதனை ஆய்வோர் கண்கள் காணத்தவறாது.

அடுத்த சூத்திரத்தில் புல்லினம், மர இனம் ஆகிய இரண்டிற்கும் பொதுவானவற்றை சூத்திரம் 1588இல் தெளிவு படுத்துவதைப் பார்ப்போம்.
“காயே, படிமே; தோலே, செதிளே
வீழோடு என்றாங்கு அவையும் அன்ன”
காயே=பலன முற்றாத நிலை
பழமே=உண்ணும் நிலையை எட்டிய பலன்
தோலே=பழத்தை பாதுகாக்கும் மேற்புற அமைப்பு
செதிளே=மரப்பட்டையை குறிக்கிறார்.
வீழோடு=மரத்தின் விழுதுகளுடனும்
என்றுள்ள அனைத்தும் அவை போல்வன என்று முடிக்கிறார்.
இவை அனைத்தும் வெளிப்படையாக கண்களில் படுவனவற்றை மட்டும் சுட்டுவதன் மூலம் இதற்கு மேல் ஆழமாக செல்வதற்கு வாய்ப்பே இல்லாமையை நம்மால் ஊகித்து உணர முடிகிறது.

இருப்பினும் இவர்களிடமிருந்த தொலை நோக்கு பார்வை மறுப்பதற்குள்ளதல்ல. எழுத்து ஒலிக்கு ஐயன் சுட்டியிருக்கும், நொடித்தல்-மருமனளவுக்கும்; இமைத்தலை ஒலியின் வேகத்திற்கும் எந்தப் பொறியை வைத்து தந்தார். இந்த இரண்டிற்குமான அலுகளான செசிவெல் (db) லையும், கட்டை(H3) ¬யும், தராத நிலையில்கூட இவை இரம்டும் இணைந்த நிலைக்கு அலகாக (Unit) மாத்திரையை தந்திருப்பது எப்படிப்பட்ட சான்றாண்மை.

இப்படி ஒரு அறிவுடையவை பற்றி இவ்வளவு விபரங்களையும் அன்றே தந்த அவருக்கு இன்று விண்ணிலேயே பயணிக்கும் நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடனை செய்ய முன்வருவோமாக.

ஆய்வு முழுமை வெறும். இதற்கு நானும் என் மனம் போனபடி முடிவு சொல்லக் கூடாது. இதனுடன் தொடர்புடை அறிஞர் களுடன், பல்துறை அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்தால் மட்டுமே நல்ல முடிவிற்கு வாய்ப்புண்டு. புள்ளியல் தரக் கோட்பாடு நல்ல பலனைத் தரும். அந்த நெறிப்பட ஏராளம் மெய்யறி குறிப்புகளும் வேண்டும். கூட்டு முயற்சிதான் உரிய பலனை தரும். இத்துறை அறிஞர்களின் உதவி இன்றியமையாதது என்பதனால் இத்துடன் நிறுத்தி, வாய்ப்பிற்காக காத்திருப்பது என்று முடிக்கிறேன்.

தொல்லாசான் இதற்கு சூத் 1585இல் ஓரறிவுயிரில் வேறுபாடு என்ற குறுந்தலைப்பின் கீழ்:

புறக் காழனவே புல் என மொழிப
அகக் காழனவே மரம் என மொழிய என்கிறார்.
காழ்=மரவயிரம்
காழ்த்தல்=முற்றுதல்: வயிரம் உடையதாதல்
வயிரம்=திண்மை

காலத்தால் முதிர்ந்த மரங்களுக்கு வயிரம் ஏறுதல் என்ற ஒரு நிலை உண்டு. இதனை ஆசான் புறவயிரம் அகவயிரம் என்ற நிலையில் அறிந்து, வெளிப்புற அல்லது சுற்றுப்புரமாக வயிரம் வெறுபவை புல்லினம் சார்ந்த மரங்கள் என்றும்; நடுப்புறமாக வயிரம் பெறபவை மர இன மரங்கள் என்று படுத்துக் காண்கிறார்.

புல்லின மரம் : பனைமரம், தென்னை மரம், ஈச்சமரம் போல்வன.

மரவகை மரம்: தேக்கு, செம்மரம், வேம்பு போல்வன.
என்று எடுத்துக்காட்டிய பின் முதலில் புல்வகைசார் மரங்களுக்கான உறுப்புகள் எவை என்பதை அடுத்த சூத்திரத்தில் தருகிறார்.

சூத்திரம் 1528-மர 29

ஈர் அறிவுடையன
“நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளரே அக்கிளைப் பிறப்பே”

இங்கு நாம் ஆய்வது முழுக்க முழுக்க நம்முடைய அறிவுத் திறனைதான்.

நந்து-எது? நந்து-சங்கு
முரள்-எது? முரள்-மீள்வகையில் ஒன்று

இரண்டு அறிவு என்பது சூத்திரம் 1526 கூறும் உற்றறிவதும்; நாவும் ஆகிய இந்த இரண்டறிவு, அதாவது உற்றறிதல் என்பது நாவால் அந்த உயிரினம் வெறும் உணர்வு உற்றறிவால் பெறப்பட்டு அதன் சுவையை அந்த உயிரினத்துக்கு உணர்த்த வேண்டும். இதில் கூறப்படும் இரண்டாம் அறிவான நாவு ஒரு உறுப்பு. இந்த உறுப்பு தரும் செய்தியை பெறுவதும் உறுப்பாகத்தான் இருக்க முடியும். இருக்க வேண்டும்.
மரம், செடி, கொடி வகைகளுக்கு செய்தி பெற்றுத் தரும் அமைவுகள் இல்லை.

இந்த சூத்திரத்தின்படி இந்த நந்திற்கும் முரளிக்கும் “நாவு” இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படுவதுடன் மூக்கு, கண், காது இல்லை என்பதையும் உறுதி செய்யவேண்டும். இதற்கு இந்தத் துறைசார் வல்லுனர்கள் உதவி இல்லாமல் என்னால் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட முன்னேற இயலாது என்பதால் இதையும் இவ்வளவு தகவல்களுடன் விட்டுவைக்கிறேன். தொடரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதும் தொடரலாம்.

10. சூத்திரம் 1529 மர 30

மூன்று அறிவுடையன

“சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளரே அக்கிளைப் பிறப்பே”
இந்த இரண்டு உயிரினமும் நாம் அறிந்தரையே. அறியாதவை இவற்றுக்கு நாவும் மூக்கும் என்ற இரண்டு உறுப்புகள் மட்டும் இருப்பது விலங்கியல் அறிஞர் மூலம் உறுதி செய்வது நல்லது. இதற்கும் 1528 இல் பார்த்த பார்வை பொருந்தும். இவற்றிற்கு உற்றறிவு, நாக்கு மூக்கு ஆகிய மூன்றும் இருக்க வேண்டும், அதற்குமேல் இருக்கவுங் கூடாது. உயிரியல் நூல் மற்றும் அறிஞர்களால் இதுபற்றி தெளிவு படுத்த முடியும்.

இதனுடன் இந்த வகை சார் உயிரினங்கள் எவை என்பதை அறிந்து, இவை, இவை எல்லாம் இதனுடன் தொடர்பு உள்ள உயிரினங்கள் என சுட்ட முடியும். இந்த நாவும், மூக்கும் எந்தத் தகவலை இதன் உற்றறிவிற்கு தருகிறது. அப்படி பெறப்பட்ட தகவல் எப்படி நிறைவு பெறுகிறது. தகவல்கள் நிறைவு பெற அவையவங்கள் வேண்டும். இவற்றிற்கு அவையவங்கள் உண்டா? என்றால் கால் இருப்பது தெரிகிறது. கை, அதற்கு அடுத்தாற்போல் உள்ளவை பற்றிய தகவல்கள் நம்மால் சேகரிக்கப்படவேண்டும். அப்படி சேகரித்து இந்த சூத்திரத்தின் முழுமைத்தன்மையை உறுதி செய்வது இன்றியமையாததாகும். இதற்கும் துறை சார் வல்லுனர்கள், ஏனைய வல்லுனர்கள் உறுதுணை இன்றியமையாதது. காத்திருப்பது மட்டுமே என்னால் முடிந்தது.

7. சூத்திரம் 1530-மர 31

நால் அறிவுடையன

“வண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”
வண்டும், தும்பியும் நாம் அறிந்தவையே, அவற்றிற்கு உற்றறிவும்; நாவும்; மூக்கும் கண்ணும் இருப்பதை விலங்கியல் அறிஞர்கள் உதவியுடன் உறுதி செய்து கொள்வது சிறப்புடையதாக இருக்கும். ஐயனின் இந்த தொலை நோக்கு நம்மை நிலை தடுமாற வைக்கிறதல்லவா. முன் பக்கங்கலில் பார்த்த அனைத்தையும் இதன்டுன் இணைத்துப் பார்க்கவும் இந்த வண்டு, தும்பியின் வகை சார்ந்த உயிரினங்கள் வேறு உண்டு என்பதனால் பிறவும் உளரே அக்கிளைப் பிறப்பே என்று கூறுகிறார். நாம் இக்கிளை சார்ந்தவற்றை அடையளம் கண்டு இவற்றுடன் சேர்த்துத் தெளிவு பெறவேணடும்.

வண்டு; தும்பி என இவற்றுடன் உள்ள அனைத்திற்கும்

1. உற்றறிவு, 2. நாக்கு, 3. மூக்கு, 4. கண், ஆகிய நான்கு உறுப்புகள் உண்டு என்கிறார். அவையவங்களை நம் அறிவிற்கு இருந்தால் மட்டுமே, தாங்கி இருக்கும் உறுப்புகள் செயல்படும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தகவல் பெறுவதும், தகவல் தருவதுமான உறுப்புகள் மட்டுமே அதாவது அறிவு சார் உறுப்புகளே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

சூத்திரம் 1531-மர 32
ஐந்து அறிவுடையன

“மாவும், மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”
அனைத்து வகையான விலங்கினங்களும், பகுத்தறியும் திறன் அற்ற மனிதர்களும் ஐந்து அறிவுகளான உற்றறிவு; நாவு; மூக்கு; கண்; காது ஆகிய ஐந்தையும் பெற்றிருக்கும். இவை அதன் செயல்பாடுகளால் நம்மால் அறிய முடியும் அத்துடன் நான்கு உறுப்புகள் வெளிப்படையாகவே தெரியும். இவற்றை எல்லாம் மிருகங்களிடம், சுட்டிச் சொல்வதனால் ஆடு, மாடுகள், நாய், பூனைகள், காட்டு விலங்குகள் இவை அனைத்தும் உற்றறிவு தவிர மீந்தவற்ஹை வெளிப்படையாகவே பெற்றிருக்கின்றன. அவற்றை நம் கண்கள் நமக்குக் காட்டவும் தவறவில்லை. இவற்றுடன் பகுத்தறியும் திறனற்ற மானுடரையும் இணைந்து விட்டார்.

இவற்றை கூர்ந்து கவனித்தால் ஒரு அவையவமும்; பகுத்து அறியும் அறிவும் இவற்றிடம் இருக்காது. நான்கு அறிவுகளும் செயலாற்ற அவற்றில் வெறும் தகவல்களை பகுத்து உணராமல் செயலாற்றும், இவைகளால் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த இயலாமையால் இவற்றைப் பஹ்றி நாம் மேற்கொள்ளும் ஊகத்தின் அடிப்படையில் இவை அனைத்தைப் பற்றியும் மூடிவிட்டு நாம் இந்த முடிவுகள் அடிப்படையில் அவற்றைப் பற்றி முடிவிடுகிறோம். இதனால் இம்முடிவுகளில் போதுமான அளவிற்கு குறைவுகளும், ஓர் அளவிற்கு நிறைவுகளும் இருக்க இடம் உண்டு. தெளிவு பெறவேண்டிய ஐயங்கள் ஏராளம்.

சூத்திரம் 1532-மரபியல் 33

ஆறு அறிவுடையன
மக்கள் தாமே ஆறு அறிவுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”
சூத்திரம் சிக்கலற்று இருப்பினும், சிக்கலாக்க நாங்கள் இருக்கிறோம் என்பது போல் உரை ஆசிரியர்கள் முனைந்து நிற்பது கண்கூடு. அதுபற்றி நாம் கவலை கொள்ளக்கூடாது. சூத்திரத்தை கவனியுங்கள்.

மக்கள் தாமே = மக்கள், மானுடர் மட்டுமே
ஆறு அறிவுயிரே = ஆறு அறிவினைப் பெற்றிருக்கும் உயிரினம்.
இவ்வளவுதான் சொல்லி இருக்கிறார். அனைத்துமே தெள்ளத் தெளிவாக இருக்கும்போது, சொல்லாததை ஏன் செல்லவேண்டும்? இச்சூத்திரத்தின் பிற்பகுதி “பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” என்பது இதற்கு முன்னால் சொல்லப்பட்ட தின் முறைமையே தவிர வேறு அல்ல. முக்கியத்துவம் தரப்பட வேண்டியது அல்ல.

இங்கு சொல்லப்படும் ஆறு அறிவு சூத்திரம் 1526 இல் கூறப்பட்டிருப்பதின் தொகுப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. இந்த சூத்திரத்தில் மக்களிடம் ஒன்று முதல் ஆறு அறிவும் இருக்கிறது என்கிறார். இப்போது நாம் பார்த்த சூத்திரங்கள் 1527 முதல் 1532 முடிய ஆறு சூத்திரங்களையும் ஒரு சேர பெற்றிருக்கும். உயிர் தாங்கிய வாழ்வன பகுதியில் நிற்பது மானுடம். இந்த வாழ்வன அனைத்தும், ஆண், பெண் என இருபெரும் கூறாக இருப்பதை தெரிந்திருந்தும் அதற்கு முக்கியத்துவம் தராமல் அறிவு ஒன்றிற்கே முக்கியத்துவம் தந்து, அதன் அடிப்படையில் உயிர் இனங்களைப் பார்க்கிறார். உயிருக்கான வரையறையை இதற்கு முன் உள்ள பகுதியில் பார்த்து விட்டோம். இதன் அடிப்படையில் இந்த வாழ்வன என்னவாக கூறப்படுகின்றன என்பதை உற்று பார்த்த அவர் அறிவில் பட்டது. அது அது தாங்கி இருக்கும் அறிவின் எண்ணிக்கையில் அடக்கி ஒன்று முதல் ஆறுவரையான உயிர் உள்ளவற்றை நமக்கு தெளிவுபடுத்தினார்.

இப்படி சுட்டிய நிலையில் சூத்திரம் 1526 இன் தேவை என்ன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். தன் காலத்திற்கு பிறகு வருவோர் அவர் தம்மனம் போன போக்கில் பொருள் கொள்ளாதிருக்கவேண்டியே. மானுடத்தை மையமாக வைத்ததுடன் அதனை தன்னாலும் உணர்ந்து தரமுடியும் என்பதால் மட்டுமே சூத்திரம் 1526றினை வைக்கிறார். எனவே சூத்திரங்கள் ஆறிலும் கூறப்பட்டுள்ள அறிவு நிலைகள் ஆறையும் ஒட்டு மொத்தமாய் பெற்றிருப்பவன் மனிதன் என்பதனாலும், இவை அனைத்தும் இவனிடம் இருக்கும் ஆறு உறுப்புகளில் அடக்கம் என்ற நிலையில் முதல் அறிவு இந்த உறுப்பு என்று தொடங்கி ஆறு அறிவிற்கும் ஆறு உறுப்புகளை துல்லியமாகத்தான் அவர் சுட்டுகிறார். நாம் நம் அறிவின் குறையால் தடுமாறுகிறோம். இப்போது ஐயன் காப்பிக்காட்டு ஆசான் எப்படி தெளிகிறார் என்பதைப் பார்ப்போம்.

சூத்திரம் 1526- மர 27:

உயிர்ப்பாகுபாடு

1. தலைப்பு எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும் நம் பணியைத் தொடங்குவோம்.

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே”
உற்று=கூர்ந்து பார்ப்பது
மூளையை பயன்படுத்தி கூர்ந்து பார்ப்பதையே இது குறிக்கும், குறிக்கமுடியும்.
இப்படி மூளையை பயன்படுத்தி ஒன்றை கூர்ந்து ஆய்வதற்கான திறமையே ஒன்றாவது அறிவு. என்று கூறுவதாகவே எனக்கு தோன்றுகிறது.

2. இரண்டு அறிவதுவே அதனோடு நாவே”

அதனொடு-ஒன்றாம் அறிவோடு சேர்ந்து
இப்போது நாவே-நாக்கே. இந்த நாக்கின் பணி என்ன?
நா காக்க…!
இதன் பணி பேச்சிற்கு ஒத்துழைப்பது
இதன் அடுத்த பணி சுவை அறிதல்
முதலாவது பணிக்கு யாரோ வழி நடத்த வேண்டும். அறிவுறுத்த வேண்டும், அதன்படி சொற்கள் வெளிப்படும். எழுத்ததிகாரம் இதுபற்றித் தெளிவாய் கூறும்.

அடுத்த நிலையில் வாயினுள் புகுவதற்கு தந்த அந்த பொருளின் நல்லது, கெட்டது என்ற நிலையையும், அதன் சுவையையும் இந்த நாக்கு யாருக்குத் தெரிகிறது? அப்படி தெருவிக்கப்பட்டத் தகவலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து அந்தத் தகவலை உரிய உறுப்புக்கு தரும் உறுப்பு எது? அப்படி தகவல் தர தேவைப்பட்டதால் தானே அப்படி வாய்பட்டதை உட்கொள்ளவோ அல்லது வெளியே துப்பவோ செய்கிறோம், இச்செயலுக்கான மூல உறுப்பு எது? இதனை இன்றுள்ள அறிவாற்றலால் அறிவோம்.

3. மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே”

உன்னிப்பாய் கவனித்தால் இரண்டில் அதனொடு என்றவர் மூன்றாவதில் அவற்றோடு என்கிறார். அப்படியானால் மூன்றிற்கும் தொடர்பிருப்பதாகத்தானே சொல்கிறார்…! நிற்க:
மூக்கை கவனியுங்கள் நம் தலையில் வெளிப்படையாகத் தெரியும் சுட்டப்பட்ட வரிசையில் இரண்டாவது உறுப்பு. இதற்கும் இரண்டு பணிகள். அவை:

ஒன்று நம்மை தொல்லைப்படுத்தாமல் நடந்து கொண்டே இருக்கும் “சுவாசித்தல்” இது ஒரு உயிர்காப்புப் பணி. தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
அடுத்த பணி “முகர்தல்” நாற்றம் அறிதல். இந்த நாற்றம் ஏற்புடையதாய் இருந்தால் தடை இன்றி அனுமதிக்கிறோம், ஏற்புடையது இல்லை என்றால் அது தொடர்பான செயலில் இறங்கி கைகுட்டையால் மூக்கைப் பொத்திக் கொள்ளவும். அவ்விடம் விட்டு விலகிச் செல்லவும் செய்கிறோம். இந்த அறிவுறுத்தல் எந்த உறுப்பிடமிருந்து பெறப்பட்டது எந்த அவயவங்களால் எப்படி நிறைவுற்றது? பொறுப்பேற்கும் உறுப்பு எது? இதனை இன்றிருக்கும் அறிவாற்றலால் அறிவது நம் கடமை. அடுத்தாற்போல்:

4. நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே”
இங்கும் “அவற்றொடு” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனால் இதற்கு முன்பு பார்த்த மூன்றையும் இத்துடன் இணைத்தே பார்க்க வேண்டும்.

இந்தக் கண்ணையும் பாருங்கள்; இதற்கும் இரண்டு பணிகள். ஒன்று துன்புறும்போது கண்நீரை சுரந்து துன்பத்தையும்; அளவு தாண்டியே இன்பத்தின்போது கண்ணீரை சுரந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டாவது பணி காணும் காட்சிகளை அப்படியே கொண்டு செல்லவேண்டிய உறுப்பிற்கு கொண்டு சேர்ப்பது. மனம் ஏற்றுக் கொள்ளாததைப் பற்றிய தகவல் தரப்பட்டதும் தள்ளிப்போக வைப்பதும்; உள்ளம் உவப்பதைப் பற்றிய தகவலைப் பெற்றதும் அருகில் செல்ல வைப்பதும் இயல்பாய் நடக்கிறதல்லவா. அதற்கு ஏற்றாற்போல் தொடர்புடைய அவையவம் இயங்குகிறதல்லவா. இப்படி இவற்றை இயக்கும் உறுப்பு எது? இவற்றுடன் நாம் இதற்கு முன்னால் பார்த்தவற்றையும் கண்ணுடன் தொடர்புடைய பகுதிகளையும் இணைத்துப் பார்ப்பது நன்மை பயக்கும்.

5. “ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே”
நமது தலையிலேயே இருக்கும் ஐந்தாவது உறுப்பு. கண்ணாடி முன் நின்று பார்க்க முடியக் கூடியதும் இந்த வரிசையில் நான்காவது உறுப்பும் இந்த காது அல்லது செவியாகும். இதற்கான பணி ஒன்றே ஒன்றுதான். ஒலியையும், அந்த ஒலி தாங்கி நிற்கும் செய்தியையும் அப்படியே பெற வேண்டியதும், பெற்றதை அப்படியே உரிய உறுப்பிற்கு அனுப்பி வைப்பதுமேயாம். செய்தியைப் பெற்ற உறுப்பு அதனை கூறுபடுத்தி ஆய்ந்து எந்த அவையவத்தோடு தொடர்புடையது அந்தச் செய்தி என்பதை ஆய்ந்து தொடர்புடைய உறுப்பிற்கு அதைத்தர, பெற்ற உறுப்பு அல்லது அவையவம் அப்பணியை நிறைவு செய்கிறது. இதனையும் மேலே பாததவற்றுடன் தேவைக்கு ஏற்ப தனித்தோ இணைத்தோ தேவைக்கேற்ப பார்க்க வேண்டும். இப்படிப் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.

6. இந்த சூத்திரம் சுட்டும் ஆறாவது நிலை.
ஆறாவது அறிவு.
“ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே”
இப்படி கூறியபின் எப்படி முடிக்கிறார் என்பதைப் பாருங்கள்.
“நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
அதாவது செவ்வையாக, அல்லது நேர்மையாக அல்லது தெளிவாக அறிந்தோர் நெறி பிழையாது இப்படி முறையாக உணர்த்தியுள்ளார்கள்.
ஐயனின் இந்த முத்தாய்ப்பை மனதில் நிறுத்தி மேலே கூறியுள்ளதை ஆய்வோம்.
முதலாவதாகக் கூறிய “உற்று அறிவதுவே” என்பது போன்று ஆறாவது அறிவான மனனேயும் மறைமுகமாய் கூறப்பட்டிருக்கிறது. இப்படி மறைமுகமாய் கூறப்பட்டிருப்பதால் நாம் எல்லோருமே தடுமாற்றத்திற்கு ஆட்பட்டுப் போகிறோம். அதற்குக் காரணம் இந்த இரண்டும் கூட நம் உடலில் உள்ள உறுப்புகளா?
இல்லை வேறு எதையாவது சுட்டுகிறாரா என்பதை அறிவதில் ஏற்படும் சிக்கலே!

நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ள பல தொலை நோக்கு சிந்தனைகளில் பலவற்றை நம்மிடம் உள்ள சோம்பேறித் தனத்தாலும், சிரமப்பட மறுக்கும் போர்க்காலும் முறையாக அறிந்து கொள்ள மறுக்கிறோம். அதனைத் தொடர்ந்து மறந்தும் போகிறோம். இதன் விளைவு நம்மிடம் உள்ள இந்த இயலாமையை சாதகமாக்கிக் கொண்டோர் அதனை கைப்பற்றி தங்களது என்கிறார்கள், அந்தோ பரிதாபம்! ஆமாம் உன்னுடையதுதான் என்கிறோம்!

6. 1. “பலசாலிக்கு பாரம் என்றொன்றில்லை.
முயற்சி உடையோருக்கு தூரம் என்று ஒன்றில்லை
கற்றோர்க்கு அன்னிய நாடு என்றொன்றில்லை
அன்புடையோர்க்கு அன்னியன் என்றொருவருமில்லை”
இந்த முதுமொழியினை மனதில் நிறுத்தி முதலாவதாக “உற்று அறிவதைப்” பார்ப்போம்.

6. 2. இரண்டு முதல் ஐந்து அறிவு என்று சுட்டப்பட்டுள்ள நான்கும் “நாக்கு, மூக்கு; கண்; செவி” ஆகியவை உடம்பின் உறுப்புகள் பொருளதிகாரம் முதல் இயல் முதல் ஒன்பதாவது இயல் வரையிலும் தலைவன் தலைவி வாழ்வுக்கு வேண்டியவற்றையே பேசுவதால், மானுடர் பற்றியது தான் இதுவும் ஒன்று உறுதியாய் மூடிவிடலாம். அதனால் இந்த சூத்திரம் இந்த அறிவுகள் மானிடத்திடம் குடி கொண்டிருக்கும் உறுப்புகளை துல்லியமாகக் கூறுவதாகவே படுகிறது.

6. 3. மேலும் ஆழ்ந்து பார்த்தால் இரண்டு முதல் ஐந்து வரையிலான நான்கும் பளிச்சென்று முகத்தில் அமைந்துள்ள உறுப்புகளே. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயல்பாடுகள். இந்த செயல்பாடுகள் அது அது அது அதற்குள்ள எல்லைக்குட்பட்ட தகவலை சேகரித்து அனுப்ப, அது மனித மூளையைச் சென்று அடைகிறது. அப்படி மூளை பெற்ற தகவல்களை அதனதன் அடிப்படையில் மனித அவயவங்களுக்கு தரப்பட்ட அந்தந்த அவையவங்கள் அதனதன் செயலில் இறங்குகின்றன. இந்த செயல்பாடு தனியாகவோ அல்லது ஒன்றோடொன்று இணைந்த தகவல் அடிப்படையிலோ அமையும். அதாவது.

1.பெறுதல்
2. பெற்றதை பரிசீலித்தல்
3. அதன் அடிப்படையில் உத்திரவு பிறப்பித்தல் இப்படி மூன்று பணிகள் இந்த மூளையால் முறையாக நிறைவு செய்யப்படுகின்றன. இது துறைசார் நூல்களுக்கும்; வல்லுனர் கருத்துக்களுக்கும் துல்லியமாக ஒத்துப் போகிறது. இதனுடன் இந்த மூளையை நாம் பயன் கொள்ளும் முறையும் உற்றறிதலாம். ஏராளம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் “Non Application of Mined” தீர்த்து அறிவை செலுத்தவில்லை என்பதை காண முடியும். அப்படியானால் அதன் பொருள் உற்றறியவில்லை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். எனவே இந்த வாழ்வன பகுதியில் அடங்கும் இடம் பெயரும் ஆற்றல் உள்ள அனைத்திடமும் உள்ள முதல் அறிவு என்பது மூளையே” என்ற முடிவிற்கும் வர முடிகிறது. இது இடைவிடாமல் இதற்கான நிலையிலும் இயங்குவதால் பல்வேறு இன்னல்களுக்கும் நம்மை ஆட்படுத்துகிறது.

இந்த மூளையின் இயக்கத்தை அடக்கி ஒடுக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் மாமனிதன், என்று போற்றப்படுவர். இதற்கான வளி முறைகளையும், நெறிமுறைகளையும் நமது இலக்கியங்கள் தன்னுள் அடக்கி உள்ளமையை அறிய இன்றுள்ள நம்மக்கள்; தமிழ்பற்றாளர்கள் முன் வராமல் இருப்பதால் பல இன்னல்களையும் ஒழுக்கக் குறைபாடுகளையும் நாளும் காண்கிறோம். கொஞ்சம் குமுறுகிறோம் ! குமுறுவதுடன் நிறுத்திக் கொள்வது சிறப்பு மிக்க பகுதியாகும்!!

6. 4. அடுத்ததாக உள்ள ஆறாவது அறிவிற்கு வருவோம்
“ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே”
மேலே பார்த்த அனைத்துடனும் ‘மனம்’ என்று ஒன்றை நம் முன் வைக்கிறார் ஆசான்.

மனசாட்சியுடன் பேசு! மனசாட்சிபடி நட!
உனக்கு மனசாட்சியே இல்லையா?
மனசாட்சி இருந்தால் தானே!

இவையெல்லாம் நம் மக்கள் அனைவர் மத்தியிலும் அன்றாடம் பயிலும் சொற்றொடர்கள். இவற்றைப் பேசுபவர்கள் சுட்டு விரலால் சுட்டும் இடம் “நெஞ்சம்” அல்லது மார்பின் குறிப்பிட்ட இடம். அப்படியானால் அது மார்பினுள் இருப்பதாகத்தானே அர்த்தம், அத்துடன் இவர்கள் அனைவரும் இதயத்தில் தாங்கி குறிப்பிட்டுக்கூறும் உறுப்பு இருதயம். இதனால் தான் மேலே பார்த்த சொற்றொடர்களை அதே பொருளில் இப்படியும் சொல்வது வழக்கம்.

இருதயமே இல்லாமல் பேசுகிறான்!
இருதயம் இருந்தால் இப்படி செய்வான்?
இருதயம் இன்றி இப்படி செய்கிறான்!

6. 5. இப்போது இப்பகுதி சுட்டிக்காட்டும், மனனேயும் மனசாட்சியும், இருதயம் எல்லாம் ஒன்றுதானா? என்ற வினாவிற்கு உற்றறிவை பயன்படுத்தித் தீர்வு காணவேண்டும்.

6. 6. பொறியியலின் இயந்திர பிரிவில் முக்கியமான பல கோட்பாடுகளில் ஒன்று வேகத்திற்கு வேகத்தடை இன்றியமையாதது. வேகம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் மட்டுமே நன்மை பயக்கும்.

6. 7. உலக பொது நியதியுமே எல்லாம் வரையறைக்குள் இருக்கவேண்டும் என்பது தான்.

6. 8. மானுடரின் உடம்பில் ஆற்றல் மிக்க முக்கிய உறுப்பு மூளையே. இதன் செயல்பாடு; இதன் தன்மை என்ற நிலைகளை அறிய மருத்துவ ரீதியாகவும்; மனோதத்துவம் என்றும் பல்வேறு துறைகள் இந்த மூளையையும், அதன் செயல்பாட்டையும், அதன் ஆற்றலையும் அறிய முனைந்துள்ள நிலையில் நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்லாசான் தந்த சூத்திரங்களுள் ஒன்றின் பொருளை அறிய மட்டுமே முற்பட்டுள்ளோம்.

6.9. இன்று, இந்த 21ம் நூற்றாண்டில் காணும் அற்புதங்கள் அனைத்துமே இந்த மூளை பெற்றிருக்கும் பகுத்து அறியும் ஆற்றலாலும்; உற்றறியும் திறனும் தந்த ஆக்க ஆற்றலின் விளைவே. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மூளையின் செயலாற்றலை இதனை வேகத்தின் அடிப்படையில் பார்த்தால் இதற்கும் வேகத்தடை இன்றியமையாதது என்பது தெரிய வரும்.

6. 10. இப்போது ஆறாவது அறிவிற்கு மீண்டும் வருவோம். சிறிது சிந்தித்துப் பார்ப்போம். நாம் நம் அப்பா அல்லது அம்மா வைத்திருக்கும் பணத்தில் ஒன்றே ஒன்றை அவர்கள் அறியாமல் எடுக்க முற்படுகிறோம், அதாவது ஒரு சிறிய தவறை செய்கிறோம், இந்தத் தவறை செய்ய முற்படும்போது நம் நெஞ்சு அதாவது இருதயம் எப்படி துடிக்கிறது என்று. இந்த துடிப்பு செய்யும் தவற்றின் அளவைப் பொறுத்து துடிப்பின் அளவு அதிகமாக இருப்பதை நம்மால் உணர முடியும். தவறு செய்யாத நிலையில் அது எப்படி அமைதி காக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எதன் அடிப்படையிலோ மானுடன் தவறும்போது, மூளையின் செயல்பாட்டின் போது, நல்லது கெட்டதைச் சுட்டிக்காட்டும் இந்த ஆற்றல் இருதயத்திற்கு உள்ளது அந்த அறிவுறுத்தலுக்குக் தொடர்புடையோர் கட்டுப்படுகிறோமா இல்லையா என்பது வேறு காரியம்; அறிவுறுத்துகிறது உண்மை. கட்டுப்பட்டால் துன்பம் நேராது. கட்டுப்படாவிட்டால் துன்பத்திற்கு ஆட்படுவோம்.

6. 11. இதனால், இக்காரணங்களால் தொல்லாசான் சுட்டும் ஆறாவது அறிவு, நன்மை தீமையைச் சுட்டிக் காண்பிக்கும் அறிவான மனனே என்பது மூளைக்கு அடுத்தபடியான இடத்தைப் பிடித்துள்ள இருதயமே என்பது என் முடிவு.

6. 12. இவற்றில் முதல் ஐந்தும் தலையிலும், ஆறாவதானது மார்பிலும் அமைந்துள்ள ஆறு உறுப்புகளாகும். நம் உடம்பில் நூற்றுக்கணக்கான உறுப்புகள் இருந்தும் இந்த அறு உறுப்புகளும் ஆற்றும் அறிவார்ந்த செயல்பாடு வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை என்பதும் அப்பளுக்கற்ற உண்மை. அத்துடன் இவையே நம்மை இந்த அளவில் செயல்படவும் வைத்துள்ளது.

6. 13. நம் முன்னோர்களிடம் இருந்த இது போன்ற தொலைநோக்கு பார்வைகள் நம் வயப்பட்டு நாளும் கொஞ்ச கொஞ்சமாய் மறைந்து வருவதும்; நம்மிடமிருந்து இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டவர்கள் அவற்றைத் தங்களது என்று உலகிற்கு சொல்வதைப் பார்த்த பின்பும் வாயடைத்து விழிபிதுங்கி இருப்பதை பார்த்தால் வேதனை மிகுகிறது. சண்டை சச்சரவு எல்லாம் அநாகரீகச்செயல். நம்முடைய நம்மது என்று சொல்லுங்கள். தொல்காப்பியம் தொடங்கி அனைத்து இலக்கியங்களிலும், படிந்திருக்கும் தூசியை அகற்றுவோம், உலகிற்கும் சொல்லு வோம். இவை எல்லாம் எங்கள் மூதாதையர் எங்களுக்கு விட்டு சென்றவை என்று.