slide021. உலகம் : இரு கூறுகளால் ஆனது. அவை :

1. நீர்ப்பரப்பு
2. நிலப்பரப்பு

இந்த நீர் மற்றும் நிலப்பரப்பு இரண்டுமே பொருள்களால் (Matter) நிறைந்தவை.

இந்தப் பொருள்கள் : இரு பெரும் கூறுகளில் அடங்கும். அவை :

1. வாழ்வன
2. வாழாதன

நாம் மொழி ஆய்வில் ஈடுபட்டிருப்பதால் என்னை வாழ்வன பகுதியில் ஒடுக்கிக் கொள்கிறேன்.

வாழ்வன என்றால்:

ஆண் – பெண் என இணைந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்வன அப்படி வாழாவிட்டால் வாழாவெட்டி. இந்த நிலையில் வாழ்வனவற்றை உற்றுப்பார்த்தால் தொல்லாசான் மட்டுமே நம் கண்ணில் படுவார். அவர்தான் கி.மு. பல நூற்றாண்டிற்கு முன்பே இந்த வாழ்வனவற்றிற்கு அறிவு என்று ஒன்று உண்டு என்று கூறியதுடன், ஓர் அறிவு உடையது முதல் ஆறு அறிவு உள்ளவற்றை தெளிவாக அடையாளம் காட்டுகிறார். அத்துடன் நின்றாரா என்றால் இல்லை; மனிதனிடத்தில் இந்த ஆறும் எந்தெந்த உறுப்புகளில் அடக்கம் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறார். சூத்:1526.

மானுடம் ஆறு அறிவையும் பெற்றுள்ளது. இதனால் பெற்றுள்ள ஆற்றலால் வாழ்வன, வாழாதன ஆகிய இரண்டுமே இவனது ஆற்றலினுள் அடக்கம். இதனால் இவற்றை அப்படியாகவோ அல்லது ஒன்றை மற்றொன்றோடு இணைத்தோ புதிய பொருள்களைப் படைக்கிறான். அப்படி இவனால் படைக்கப் பெறுவனவற்றிற்கு ‘செயற்கை’ என்பது பொதுப் பெயர்.

2. மொழி :

இவற்றை மனதில் தாங்கி மழி என்றால் என்ன என்று பார்ப்போம்.

மொழிக்கு இரு வடிவங்கள் உண்டு.

1. ஒலி வடிவம் – முதல் நிலை
2. வரி வடிவம் – இரண்டாம் நிலை

இவற்றில் முதலாவதான ஒலி வடிவத்தை முதலில் பார்ப்போம். பொருள்களின் இரண்டு நிலைகளான வாழாதன என்ற பகுதியினுள் அடங்கியது ஒலி. இயற்கையில் ஆயிரக்கணக்கான ஒலிகள் நிறைந்து கிடக்கின்றன. இப்படி நிறைந்து கிடக்கும் ஒலிகளை தேர்வு செய்கிறோம் என்று தெரியாமலே தேர்ந்து தன்னறிவின்றியே கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கு¢ 16 பேச்சுறுப்புகளின் உதவி¢யுடன் தம்முணர்வின்றியே முறைப்படுத்தி, குறிப்பிட்ட ஓர் முறையில் வாய் வழியாய் வெளிப்படும் ஒலியே மொழி. இப்படி மானுடத்தால் ஆக்கப்படுவதால் மொழியும் செயற்கையே. இந்த மொழியினுள் இவனால் புகுத்தப்பட்டிருக்கும் நுட்பத்தைப் பொறுத்து தரக்கட்டுப்பாட்டில் அடங்கும்.

3. சூத்திரம் – 8

ஆய்வின் வதிக்காக முதலில் சூத்.8அய் பார்ப்போம்.
“ஔகார இறுவாய்
பன்ஈர் எழுத்தும் உயிர் என மொழிப”

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்கிற பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். இதுவே இந்த சூத்திரத்தின் பொருளாகும்.

4. உயிர் :

உயிர் எழுத்துக்கள் என்றால், உயிரின் தன்மைகள் அதில் இருக்க வேண்டும். இதற்கு முதலில் உயிர் என்றால் என்ன என்பதை ஆய்வு செய்து அறிய வேண்டும்.

5. ஆற்றல்:

இதற்கு மறை திறவாக அமைந்தது ஆஃசுபோர்டு அகராதி, அதில் ‘லிமிதிணி’ என்பதற்£கு நீண்ட நல்ல விளக்கங்களை தந்ததுடன் ஓர் வித ஆற்றல் என்று குறிப்பிட்டிருந்தனர். அப்போது அறிவியலார் கூறும் எட்டு வகையான ஆற்றல் நினைவிற்கு வந்தது. அவை:

1. அடங்காற்றல்    –    Potential Energy
2. இயங்காற்றல்    –    Kinetic Energy
3. செயலாற்றல்    –    Mechanical Energy
4. வெப்பாற்றல்     –    Thermal Energy
5. வேதியலாற்றல் –  Chemical Energy
6. மின்னாற்றல்    –    Electrical Energy
7. அணுவாற்றல்    –   Automic Energy
8. சூரிய ஆற்றல்    –    Solar Energy ஆகியவை.

இப்போது இவை அனைத்திற்குள்ளும் அடங்கியிருக்கும் ஆற்றலின் பொதுவான குணாதிசயங்களை ஆய்ந்தேன். அவை :

1. பார்க்க முடியாது
2. உணர முடியும்
3. இயக்கும் இருக்கும்
4. அவற்றிற்கான அமைவுகளை இயக்கும்
5. அமைவுகள் பழுதுபடும்.
6. சரி செய்ய முடியும்
7. ஏற்ற இறக்கம் உண்டு
8. ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக அமையாது
9. தேங்கி வைக்க முடியாது.
10. பருமனளவு உண்டு.
11. வேகம் உண்டு
12. துண்டிக்கவும், இணைக்கவும் முடியும்
13. தரக் கோட்பாட்டிற்குள் அடங்கும்
14. மனித ஆற்றலுக்குக் கட்டுப்பட்டது

இப்படி 14 விதமான குணங்களைப் பட்டியலிட முடிந்தது.

6. உயிர்- II

இதற்கு அடுத்தபடியாக உயிரைப் பற்றி சிந்தித்தேன். அப்போது இந்த உயிரில் ஆற்றலை விட அதிகம்  குணங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவற்றைக் கீழே பட்டியலிடுகிறேன். அவை:

1. உயிருக்கான அமைவு உடல் – மெய்
2.  உயிர் உள்ள வரை உடல் இயங்கும்
3. உயிர் தங்கி இருக்கும் உடல் வாழும்
4. உடலின் உறுப்புகள், அவையவங்கள் தனித்தனியே வளரும்.
5. வளர்ச்சிக் குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து இருக்கும்
6. உடலையும் உயிரையும் பிரிக்க முடியும்
7. பிரிந்த உயிரை பிடிக்க முடியாது.
8. இந்த உயிர் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது
9. பிரிந்த உயிரையும் உடலையும் ஒட்ட முடியாது.
10. இனப் பெருக்கத்திற்கு இடம் உண்டு
11. உயிர் பிரிந்த உடலை பேண முடியாது.

இப்படி ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பதினொரு குணங்களை என்னால் பார்க்க முடிந்தது. இவற்றிற்கு அப்பாற்பட்ட குணங்கள் இருப்பதற்கான இடமும் உண்டு. அப்படி இருப்பின் அவற்றை இத்துடன் இணைக்க அறிஞர்கள் முன் வந்தால் ஆய்வு இன்னும் சிறப்புறும்.

7. அறிவாற்றலும் உயிரும்

ஆற்றலுக்கான குணங்களை, உயிருக்கான குணத்துடன் இணைக்க மொத்தம் 25 குணங்கள் உயிருக்கு.

6. உயிர்- III

இப்படி முந்திய 14 உடன் இந்த 11றையும் சேர்த்து மொத்தம் 25 குணங்கள். இதில் 18க்கும் அதிகமான குணங்கள் இந்த உயிர் எழுத்தில் குடி கொண்டிருந்தால் மட்டுமே இந்த 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாக இருக்க முடியும். எனவே உயிர் எழுத்துக்களைப் பார்ப்போம்.

1. உயிர் மெய்யில் உயிர் இருப்பது கண்களுக்குப் புலனாகவில்லை.
2. இயக்கும் இருக்கிறது. அ, ஆ என்று  சொல்ல முடியும்.
3. இந்த இயக்கத்திற்கு உதவி தேவை இல்லை.
4. இந்த உயிர் எழுத்துக்களுக்கான அமைவு மெய் எழுத்துக்கள்
5. மெய்க்கு 1/2 மாத்திரை ஒலி இருந்தும் உயிர் இல்லாமையால் உச்சரிக்க முடியாது
6. குறில், நெடில் போன்ற ஏற்ற இறக்கம் உண்டு.
7. இலக்கண வரம்பு உண்டு.
8. மாற்று என்ற பேச்சிற்கே இடம் இல்லை.
9. உயிர் மெய் எழுத்தைப் பிரிக்க முடியும். இணைக்கவும் முடியும்.
10. பயன்பாட்டு நிலையில் பருமனளவு வேகம் உண்டு.
11. மனித ஆற்றலுக்குக் கட்டுப்பட்டது.
12. உயிரும் – மெய்யும் இணைய உயிர்மெய் எழுத்து பிறக்கும்.
13. இவை சொற்கள், சொற்றொடரை உருவாக்கும்.
14. இதனால் இது மொழியாற்றல் என அறியப்படும்.
15. ஒவ்வோர் எழுத்தும் மாறுபட்டிருக்கும்.
16. நாளும் விரிவடையும் பயன்பாடு வளர்ச்சியைக் குறிக்கும்.
17. எழுத்துக்களை பிறப்பிப்பதால் பிறப்பிக்கும் ஆற்றல் உண்டு.
18. உயிரும் – மெய்யும் இணையும்.
19. பிறப்பும் – இறப்பும் உண்டு (Explanando)
20. மொழிக்கான வளர்ச்சி உண்டு.
21. தரக்கோட்பாட்டில் தமிழ் அடங்கும்

அ முதல் ஔ ஈறாக 12 எழுத்தும் உயிர் எழுத்துக்கள்தான்.

9. குற்றுயிர்:

12 உயிர் எழுத்துக்களையும் குற்றெழுத்து (Short) நெட் டெழுத்து (Shout) என்று இரு  கூறாகப் பிரிக்கிறார். இதில் முதலில் குற்றெழுத்தைப் பார்ப்போம். (Short Sound).

சூத்திரம் – 3.

அவை தாம்
அ, இ, உ, எ, ஒ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓர் அளவு இசைக்கும் குற்று எழுத்து என்ப.

இந்த ஐந்து எழுத்துக்களும் ஓர் அளவு. அதாவது ஒரு மாத்திரை ஒலி அளவுள்ள குறைந்த ஓசை உடைய எழுத்துக்கள் என்கிறார்.
இங்கும் ஓசை நிலையில் மட்டுமே நின்று பார்க்க வேண்டும். இதற்கு இன்றியமையாதது மாத்திரை பற்றிய முடிவு வேண்டும். (மொழியும் தரமும் – தொகுதி -7-இல் மிக விரிவாக இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.)

10. தரப்பார்வை  1 (நிலைப்பாடு)

இந்த ஒரு மாத்திரை ஒலிதான் இந்த 5 எழுத்திலும் இருக்கிறது என்பதை புள்ளியியல் தரக்கட்டுப்பாட்டு நெறி நின்று முடிவிட முடியும். இதற்கு இன்றியமையாதவை :
1. மெய் அறி குறிப்புகள் (Data)
2. வரைபட படிவுகள் (Charts)
3. புள்ளியியல் (Statistic) வல்லுனர்கள்.
4. கணினி வல்லுனர்கள்
5. துல்லியமான உச்சரிப்புடைய தமிழ் வல்லுனர்கள்
இப்படிப்பட்ட வல்லுனர்கள் கருவிகள் என பலவற்றின் உதவியுடன் இதனை உறுதி செய்ய முடியும். இவற்றை உறுதி செய்த பின் :
1. இந்த எழுத்துக்களின் ஒலியில் உள்ள எளிமை
2. இனிமை
3. நடை பாங்கு (Lusidity) ஒழுக்கு
4. வளைவு சுழிவு (Flexibility) வல்லுனர்கள்.
5. இயைய்மை (Flexible) (இசைந்து கொடுக்கும் தன்மை)

என எத்தனை ஆக்கக் கூறுகள் (Element) அடங்கியுள்ளன என ஆய்ந்து அவை அனைத்தையும் SQC தத்துவத்தைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வர வேண்டும்.

11. நெட்டுயிர்

இரண்டாவதான நெட்டெழுத்தினை (Shout) பார்ப்போம்.

சூத்திரம் : 4

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும்
அப்பால் எழும்

ஈர் அளவு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

சூத்திரத்தை நன்கு கவனியுங்கள். மேலே உள்ள 7 எழுத்துக்களும் ஈர் அளபு, இரண்டு மாத்திரை ஒலி அளவில் நின்று ஒலிக்கும்.
இதனையும் ஒலி நிலையில் மட்டும் நின்று பார்ப்போம். பிற நிலைகளையும் படிப்படியாய் பார்க்கலாம். மாத்திரை பற்றி தொகுதி ஏழைப் பார்க்கவும்.

2. முரண்:

சூத்திரம் – 3 இல் உள்ள 5 குற்றோசைக்குத்தான் நெட்டோசை தர வேண்டும். அதுதான் சூத்திரம் நான்கின் பணி. இங்கோ ஐ, ஔ என்ற இரண்டு இரட்டை ஒலி எழுத்துக்கள் புதிதாக அறிமுகம் பெற்றிருப்பது முரண். இது பற்றிய தனியான ஆய்வு இன்றியமையாதது. காரணம் கல் வெட்டாய்வுகளில் கண்டு எடுக்கப்பட்ட காலாகால மொழி வளர்¢ச்சிப்படி அல்லது அட்டவணை தமிழ் மொழிக்கு உண்டு. பண்டைய இலக்கியங்களில் இவை இடம் பெற்றுள்ள நிலைகளும் தமிழுக்கு உண்டு. அந்த அட்டவணையை பயன்படுத்துவோமேயானால்,

1. கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் இந்த எழுத்துக்கள் நமக்கு கிடைத்துள்ளன.

அதன்படி
2. கி.பி. 9ம் நூற்றாண்டுதான் ஐ அறிமுகமாகிறது.
இந்த கால கட்டம்தான் தமிழகத்தின் துயரத்திற்கான தொடக்கக் காலமாகத் தெரிய வருகிறது. எனவே இத்துடன் வரலாற்றினையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

3. அடுத்த எழுத்தான ஔ கி.பி. 19ம் நூற்றாண்டு வரையிலும் அட்டவணையில் இடம்பிடிக்கவில்லை என்பதையும் அறிய வேண்டும்.

இந்த உண்மைகளை தியாக உணர்வோடு ஆய்வோமேயானால் ஏராளமான உண்மைகளை அறிய வாய்ப்பு ஏற்படும்.
அடுத்தபடியாக ஆய வேண்டியது, இந்த எழுத்துக்கள் இருப்பதால் நன்மையா? தீமையா?

பல நூற்றாண்டுகளாய் இருக்கும் இந்த எழுத்துக்கள் இருப்பதில் இடையூறு இல்லை என்றால் இருக்கட்டும் என்பதுதான் எங்கள் முடிவும். தரப்பார்வையில் பார்க்கும் போது இவை நேர்க்கோட்டில் நின்று விலகி நிற்பதைச் சுட்டுகிறேன். அவ்வளவுதான். எங்களது இந்த ஆய்விற்கும் இவை வெளியே நிற்பதால் சுட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.

சூத்திரம் 4, சூத்திரம் 3இல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றோசை (ஒரு மாத்திரை ஒலிக்கு) நெட்டோசை (இரண்டு மாத்திரை) மட்டுமே தர வேண்டுமே அல்லாமல் புதிய எழுத்துக்களை  அறிமுகம் செய்யக் கூடாது. எனவே, இந்த ஐ, ஔ வை தனிமைப்படுத்துகிறோம்.

அடுத்ததாகப் பார்ப்போமேயானால், இந்த குற்றோசை எழுத்துக்களையே அப்படியே நெட்டோசையில் குரலை உயர்த்தி, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என்று உச்சரிக்கிறோம். இந்த நிலை ஐ, ஔவிற்கு இல்லையல்லவா.

அடுத்தபடியாக உயிர் தனியாகத்தான் இருக்க வேண்டும். அதேபோல் மெய் தனியாகத்தான் இருக்க வேண்டும்.  ஒன்றை மற்றொன்று  தொட்டால் அது உயிர்மெய் எழுத்தாக மாறிவிடும்.

ஐ, ஔ இரண்டையும் சொல்லிப் பாருங்கள். உயிர் ஓசையும் மெய் ஓசையும் வெளிப்படும். இருப்பினும் இவற்றிற்கு பிறப் பெழுத்துக்கள் இருக்கிறது. அவையே, ‘கை’, ‘கௌ’ எனத் தொடரும் உயிர் மெய் என்றிருப்பதால், இந்த ஐயையும் ஔவையும் விதி விலக்கு, அதாவது மூன்றாம் நிலை எழுத்தாகக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

சூத்திரங்கள் 1இம் 2இம் சுட்டும் சார்பு எழுத்துக்கள் நிலையில் ஏற்பது, தமிழ் மொழி பின்பற்றும் இயற்கை விதிகளுக்கு இன்னல் தாராததாக இருக்கும். புற நடை என தொல்காப்பியம் சுட்டும் நிலைகளையும் நாம் உள்ளத்தில் கொண்டு இதனைச் செய்யலாம். இதற்கு மேல் செய்ய வேண்டியவை:
சூத்திரம் 3றினை பார்த்தது போல் தரப்பார்வையில் பார்க்க வேண்டும்.

13. தரப்பார்வை :

1. தரக்கட்டுப்பாட்டு நெறிகள் அடிப்படையில் பார்த்தல்
2. மாத்திரை நிலை அறிதல்
3. எளிமை அறிதல்
4. இனிமை அறிதல்
5. நடை பாங்கு (Lusidity) வல்லுனர்கள்.
6. வளைவு சுழிவு தன்மை அறிதல் (Flexibility)
7. இயைய்மை (இசைந்து கொடுக்கும்) தன்மை (Flexible) அறிதல்
இவ்வாறு எத்தனை ஆக்கக் கூறுகள் (Element) உண்டு என்று அறிய முடியுமோ, அத்தனை ஆக்கக் கூறுகள் அடிப்படையில் பார்த்து சிறப்புகளை உலகோர் முன் வைக்க முடியும்.

14. முரண் – 2

இவற்றிற்கு அடுத்தபடியாக ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய ஐந்து எழுத்துக்களையும் கவனியுங்கள். இவற்றில் ஆ, ஏ, ஓ இந்த மூன்றும் நெட்டொலியை பொறுத்த மட்டில், பொருத்தமும், எளிமையான குறிகள் மூலம் நெட்டொலியை பெற்றிருப்பதை அறிவுறுத்துகின்றன. இனிய முகத்துடன் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை.

அடுத்த படியாக விடுபட்டுள்ள ‘ஈ, ஊ’ இரண்டையும் கவனியுங்கள். இதில் முதலில் ‘ஈ’யை எடுத்துக்கொள்ளுங்கள். இது தாய் எழுத்தின் சாயலை முற்றுமாய் இழந்து நிற்கிறது. பழக்கத்தின் காரணத்தால் மட்டுமே இயின் நெட்டெழுத்து என்று அறிய முடியும். இது நெறி தவறிய நிலை. சரி செய்தால் மொழியின் சிறப்பு பேணப்படும்.

அடுத்து நெட்டெழுத்து ‘ஊ’வை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தாய் எழுத்து சரியாக இருக்கிறது. ஆனால், நெட்டொலிக்காக ஒரு உயிர்மெய் எழுத்தை புகுத்தி இருப்பது, மொழியில் இதுகாறும் கடைப்பிடிக்கப்பட்டுள்ள தத்துவம் பிறழ்வதைக் காண முடிகிறது. ஒரு மெய்யில் ஒரு உயிர் தங்கலாம். ஆனால் உயிரில் எதுவுமே தங்கக்கூடாது. உயிர் தனித்துவம் உடையது. ஒலி மாற்றம் வேண்டின், ஒலியற்ற எளிமையான குறிகள் மட்டுமே இணையலாம். இதுவே இங்கு பேணப்படும் ஒழுக்கம்.

இதற்கு மாறாக உயிர்மெய் ஒலி உள்ள எழுத்தால் நெட்டோசை பெறுதல் கூடாது. இன்னும் கவனித்துப் பார்த்தால் உ+ள்+அ இருப்பதைக் காண முடியும்.
அப்படியானால் உ – ஒரு உயிர்
அ – மற்றுமோர் உயிர்
ள் – ஒரு மெய்

உயிர் எழுத்தின் தனித்துவம் எப்படி தடைப்பட்டுள்ளது. தவிர்த்த ஆக வேண்டிய முரண், செய்யக்கூடாதது செய்யப்பட்டுள்ளது. ஆய்ந்து முடிவெடுப்போம்.  எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற நிலையும் கூடாது.

15. பார்வை:

இதன் மூலம் தரப்பார்வை எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பதை அறிந்திருப்பீர்கள். இங்கும் கருத்தியல் (Theoretical) பார்வை மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. நடைமுறை பார்வைகளான இந்த எழுத்துக்களுக்கான (உயிர் எழுத்துக்களின்) பார்வைகளானவை.

1. ஒலி நிலை
2. மாத்திரை ஒலி நிலை
3. பருமனளவு (Volume) in decibel
4. வேகம் (Frequency) in Hz

என்பன போன்றவையும், இதற்கு முன்பு கூறப்பட்ட எளிமை, இனிமை முதலியனவும் முடிவிடப்பட வேண்டும்.

16. முடிவுரை

சுருங்கச் சொன்னால் பல நூறு கூறுகள் (Element) களில் இருந்து ஒன்றே ஒன்றை எடுத்து அதில் 30 விழுக்காட்டளவே இதுகாறும் பார்த்துள்ளோம். ஒரு கூறிலும் 70 விழுக்காடு பார்க்க வேண்டியுள்ளது. காலம் கை கொடுக்குமா?

சொ.அ.ல.கணேசன்
9444737451

பேரா.கா.அரங்கசாமி
9443219085